அக்டோபர் 16-இல் சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா
திருநெல்வேலி,செப்.25- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் தச்சநல்லூரில் அவரது இல்லத்தில் 24.9.2023 அன்று காலை 11 மணியளவில் உற் சாகத்தோடு நடைபெற்றது.திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட திராவிடர்கழக செயலாளர் இரா.வேல் முருகன் சிறப்புரையாற்றினார்.
சேரன்மாதேவியில் 16.10.2023 அன்று சேரன் மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா!,
பெரியார் பெருந்தொண்டர், திராவிட முன்னேற் றக் கழக அறச்செம்மல் பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு பாராட்டுவிழா நிகழ்ச்சியினை எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
அக்டோபர் 16 ஆம் தேதி சேரன்மாதேவி வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கும்,தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
பிஜேபி அரசின் குலத்தொழில் கல்வி திட்டத் தின் ஆபத்தினை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரை பயண தொடர்கூட்டத்தை நவம்பர் முதல் வாரத்தில் பாளையங்கோட்டையில் நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்து சேரன்மாதேவியில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்குவது என தீர்மானிக் கப்பட்டது.
கூட்டத்தில் கழக காப்பாளர் இரா. காசி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சே.சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி தலைவர்இரா. பானுமதி, தச்சநல்லூர் பகுதி தலைவர் இரா .கருணாநிதி, தச்சநல்லூர் பகுதி செயலாளர் ப.பாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகர செயலாளர் வெய்லி முத்து, மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.சூர்யா, மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன், தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட் ,பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மத்தூர் நிலவன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தினர் அறிவாசான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலரினை பெற்று மகிழ்ந்தார்கள்.
முன்னதாக மேனாள் சட்டப் பேரவைத் தலை வரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செய லாளருமான இரா.ஆவுடையப்பன் அவர்களை கழகப்பொறுப்பாளர்கள் சந்தித்து சேரன்மாதேவி விழா சிறப்பாக நடைபெற கலந்துரையாடினார்கள். சிறப்பாக நடத்துவோம் என மாவட்ட திமுக செயலாளர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment