வருகை தந்த அனைவரையும் மாவட்ட கழக தலைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வர வேற்று உரையாற்றினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் இரா.கணேசன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஸ்டாலின், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.நீ.வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் மோகன வேலு, தமிழ்முரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் யுவராஜ், கழக காப்பாளர் அரக் கோணம் பு.எல்லப்பன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு.லோகநாதன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். பொதுக்குழு உறுப்பினர் பொதட்டூர் புவியரசன் தலைமை உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ந.ரமேஷ் நிகழ்வை ஒருங் கிணைத்தார். திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்தார். காசிநாதபுரம் வில்சன் குமார், பொதட்டூர்பேட்டை திராவிடமணி, உஷா, ரமணிசித்ரா, இமையா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் மா.அழகர்சாமி முதல் வகுப்பை நடத்தினார். திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
திராவிடர் கழக துணைப்பொதுச் செய லாளர் சே.மெ.மதிவதனி ‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்’ என்ற தலைப் பில் வகுப்பெடுத்தார். எழுத்தாளர் மஞ்சை வசந்தன் ‘கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ‘மாணவர்களுக்கு சமூகநீதி ரீதியாக ஏற்பட்டி ருக்கும் சவால்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்
வழக்குரைஞர் சு.குமாரதேவன் ‘இந்து, இந்துத்துவா,சங்பரிவார்,ஆர்.எஸ்.எஸ்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். திருத்தணி தமிழ் முரசு ‘மந்திரமா, தந்திரமா? அறிவியல் விளக் கம்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் ‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழக துணைப்பொதுச் செயலா ளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் ‘தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்’ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப் பாளர் இரா. ஜெயக்குமார் ஏற்பாடு செய்த கழக பொறுப்பாளர்களையும் பங்கேற்ற மாண வர்களையும் பாராட்டி உரையாற்றினார்.
பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது பயிற்சி மாணவர்கள் அனைவரும் கழக பொறுப்பா ளர்களுடன் குழுப் படம் எடுத்துக் கொண் டனர் சிறப்பாக குறிப்பு எடுத்த மாணவர்கள் தனுஷ், காவியா, சந்திரலேகா, சக்தி, இமையா ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டுள்ளன
மொத்தம் 31 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் ஆண்கள் 14, பெண்கள் 17
பள்ளி மாணவர்கள் 23 - கல்லூரி மாண வர்கள் 8 பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment