"பெரியார் ஓர் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்", என உளவியல் நிபுணர் ஜெ.வெண் ணிலா பேசினார். பெரியாரில் பயிற்சிப் பட்டறை 02.09.2023 அன்று குன்னூர், ராக்பிரோடு சாலை யில் அமைந்துள்ள டாக்டர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் "பெண்ணுரிமையின் பேரிலக்கணம் பெரியார்" எனும் தலைப்பில் உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா பேசியதாவது:
உங்களை நீங்களே ஓவியம் தீட்டுங்கள்!
ஒரு தாள் கொடுக்கப்பட்டு, மாணவர்கள் வட்டமாக அமர வைக்கப்பட்டனர். உங்களை நீங்களே வரையுங்கள் என அறிவிக்கப்பட்டது. தயக்கம் எதுவும் வேண்டாம். நமக்கு ஓவியம் தெரியாதே என யோசிக்க வேண்டாம். ஒரு தலை, இரண்டு கை, கால்கள், ஒரு தலை, மூக்கு என உங்களிடம் இருப்பதை வரையவும்.
அருகில் இருப்போரைப் பார்த்து வரைந்து விட வேண்டாம். அவர்களைப் போலவே உங்களைத் தீட்டி விடக்கூடும். இரண்டு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் வரைந்த ஓவியத்தை அருகில் இருப்பவரிடம் கொடுங்கள். இப்படி ஒவ்வொருவரும் மாற்றிக் கொள்ளுங்கள். ஓவியத்தில் என்ன விடுதல் இருக்கிறதோ அதை நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் தாள் உங் களிடம் வரும் வரை இந்தச் சுற்று தொடரட்டும். இந்த மனநலப் பயிற்சியில் 20 பேர் இருக் கிறீர்கள். நீங்கள் வரைந்த ஒரு ஓவியத்தை மீத மிருந்த 19 பேரும் சீர் செய்துள்ளார்கள். இப் போது சொல்லுங்கள்! உங்களை நீங்கள் வரைந் ததை விட, பிறர் எப்படி வரைந்துள்ளார்கள்?
நம் வாழ்க்கையை யார் வாழ்கிறார்கள்!
நான் வரைந்ததை விட, பிறர் என்னை சிறப் பாக வரைந்துள்ளார்கள் என நினைக்கிறீர்களா அல்லது எனது ஓவியத்தைச் சேதாரம் ஆக்கி யிருப்பதாகக் கருதுகிறீர்களா? ஒரு விசயத்தை நினைவில் கொள்வோம். நாம் விளையாடுவதை விட, பிறர் தான் நம் வாழ்க்கையில் அதிகம் விளையாடுகிறார்கள்.
நமக்குக் கிடைத்த வாய்ப்பில் நம்மை நாம் எப்படி வரைகிறோமோ, எப்படி வெளிப்படுத்து கிறோமோ அப்படித்தான் அவர்களும் நம்மைப் பின் தொடர்வார்கள். அதாவது நீங்கள் ஆணாக இருந்து, பெண் தோற்றத்தை வரைந்தால், அதையொட்டியே அவர்களும் சிந்திப்பார்கள். ஆக நாம் யார் என்பதில் நமக்கு ஒரு தெளிவு வேண்டும். அதை வெளிப்படுத்துவதில் கவன மும், நேர்த்தியும் வேண்டும்.
வாய்ப்பு யாருக்கு ஆண்களுக்கா? பெண்களுக்கா?
இங்கே எனக்கு "பெண்மையின் பேரிலக் கணம் பெரியார்" என்கிற தலைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. அவர்களைப் பெண்கள் என்று கூறாமல், மனிதர்கள் என்றே விளிக்கப் போகி றேன். ஒரு பிரச்சினை என்றால் அதற்குத் தீர்வு சொல்வது உளவியல். உங்களைப் பார்த்ததும் ஏதாவது சொன்னால் அது ஜோசியம்.
இங்கே ஆண்கள், பெண்கள் இருக்கிறீர்கள். அனைவரும் சற்று நேரம் எழுந்து நில்லுங்கள். நான் சில கேள்விகள் கேட்கிறேன். எனக்கு எந்தத் தடையும் இல்லை என்பவர்கள் ஒரு அடி முன்னுக்கு வாருங்கள்.
வசதிக்கேற்ப உடை அணியும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது, ஆண்களுக்கா? பெண் களுக்கா? விருப்பமான விளையாட்டை எந்த நேரத்திலும் விளையாடும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது? தாமதமாக வீட்டிற்கு வந்தால், யாருக்கு கேள்விகள் வருகிறது? இப்போதி ருக்கும் நண்பர்கள் கடைசி வரை யாருக்குத் தொடர வாய்ப்புள்ளது? சாலையோர கடை களில் தனியாக நின்று தேநீர் குடிப்பது? பயணத் தில் "லிப்ட்" கேட்டுச் செல்வது, இரு சக்கர வாகனத்தில் பெரிய வண்டி ஓட்டும் சாதகம் என இவற்றில் அதிக வாய்ப்புப் பெற்றவர்கள் ஆண்களா? பெண்களா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்!
பெரியார் ஓர் உளவியல் நிபுணர்!
இங்கே இருக்கும் ஆண்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் இருப்பதால் ஒவ்வொரு கேள்விக் கும் ஒரு அடி முன் வைத்து, முன்னேறிவிட் டார்கள். ஆனால் பெண்களோ சிலர் ஓரளவும், பலர் அதே இடத்திலும் நிற்கின்றார்கள்.
மனித வளர்ச்சிக்கு எவையெல்லாம் தடையோ, பொய் நம்பிக்கைகளோ அவை களைக் கேள்விகள் கேட்டு, உடைக்க வேண்டும் என 1950 இல் அறிவியல்பூர்வமாகக் கண்டு பிடித்து, உளவியல் பூர்வமாகவும் வெளிப்படுத்தி னார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்களோ 1930 ஆண்டே பெண்களுக்கு எதிரான தடை களை உளவியல்பூர்வமாக அறிந்து, அதற்கு அறிவியல்பூர்வமாகத் தீர்வும் கண்டு, வெற்றி பெற்றார்!
பெண்களுக்கான கொடுமைகள்!
பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் என்ன? கற்பு, சமையல் செய்வது, உடை கட்டுப்பாடு, பெண் பிறந்தாலே செலவு, ஆண்கள் மட்டுமே பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வார்கள், பெண் பொறுமையானவர், மென்மையானவர், புரணி பேசுபவர், அதிகம் படித்தால் திருமணம் செய்வதில் சிரமம், அனுசரித்து வாழும் நிர்ப்பந்தம், இரகசியம் காக்கத் தெரியாது, பக்தி அதிகம் இருக்கும், அலங்காரப் பொம்மைகள், பெண்களால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது, உடல் பருமனாக இருந்தால் திருமணம் நடக்காது, கோபப்படாத பெண்களே குடும்பப் பெண்கள், பெண் புத்தி பின் புத்தி, பெண்களுக்கு ஊரு, உலகம் தெரியாது, முடிவெடுக்கத் தெரியாது, கணவர் கொடுக்கும் பணத்தை வைத்துக் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கணக்கற்ற தடைகளைப் பெண்கள் மீது சுமத்தி இருக்கிறது சமூகம்!
பெரியாருக்கும், மக்களுக்குமான உறவு!
இவையனைத்தும் உடைத்த உளவியல் நிபுணர் தான் தந்தை பெரியார். எந்த ஒரு செயலை செய்தாலும் "கனெக்ட்" (Connect) இருக்க வேண்டும். அப்போது தான் அதை "கரெக்ட்" (Correct) செய்ய முடியும். அந்த உணர்வுப் பூர்வமான உறவு பெரியாருக்கும், மக்களுக்கும் இருந்தது. அதனால் தான் சமூகத்தில் மிகப் பெரிய வெற்றியை அவரால் அடைய முடிந்தது. இன்று வரை தன்னிகரற்ற தலைவராகவும் அவரால் நீடிக்க முடிகிறது", என உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா பேசினார்.
முன்னதாகத் தொடங்கப்பட்ட நிகழ்வில்
மாவட்டத் துணைத் தலைவர் யா.சத்திய நாதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் மு.நாகேந்திரன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன், மாவட்ட ப.க. தலைவர் ஈஸ்வரன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.வாசுதேவன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் சா.ஜீவா, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.சண் முகசுந்தரி ஆகியோர் முன்னிலையேற்றனர். பெரியார் மருத்துவக் குழும மாநிலத் தலைவர் டாக்டர் இரா.கவுதமன் பயிற்சி பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தலைப்பும்! வகுப்பும்!
"தந்தை பெரியார் ஓர் அறிமுகம்" என்கிற தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து, "பெண் ணுரிமையின் பேரிலக் கணம் பெரியார்" எனும் தலைப்பில் உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா, "பேய் ஆடுதல், சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம்" என்கிற தலைப்பில் டாக்டர் இரா.கவுதமன், "பார்ப் பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்" எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், "ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்" என்கிற தலைப்பில் வி.சி. வில்வம், "தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்" எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து, பங்கேற்ற மாண வர்களையும், ஏற்பாடு செய்த தோழர்களையும் பாராட்டி திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உரை நிகழ்த்தினார்.
பங்களிப்பும்! பங்கேற்பும்!
பயிற்சிப் பட்டறையில் சிறப்பாகக் குறிப்பெ டுத்த 5 மாணவர்களுக்குப் புத்தகங்களும், பங் கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகங்களும் வழங்கப்பட்டன. இறுதி யில் மாணவர்களுடன் குழுப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்வில் இரா.கோவரதன், பெ.முருகன், திமுக கிளைச் செயலாளர் துரைராஜ், ராஜ், டாக்டர் திருநாவுக்கரசு, மனோ ரஞ்சிதம், மதுரை சி மகேந்திரன், மாநில ப.க. துணைத் தலைவர் வீரமணி, மாநில இளைஞரணி துணைச் செய லாளர் முனைவர் வே.இராஜவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொகுப்பு : வி.சி.வில்வம்
No comments:
Post a Comment