துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை
சென்னை, செப். 20- தென் சென்னை கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் 8.9.2023 வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிரச்சார கூட்டம், தென் சென்னை மாவட்ட திரா விட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
வடசென்னை மகளிர் பாசறை பொறுப்பாளர் த.மரகதமணி ஒருங்கிணைத்தார். கூட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் வி.தங்கமணி வரவேற்புரை ஆற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் தே.செ. கோபால், மாவட்ட தலை வர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பகுத்தறிவா ளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும் பொன், மாவட்டப் பொறுப்பா ளர்கள் டி.ஆர்.சேதுராமன் அரும் பாக்கம் சா.தாமோதரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கழ கத் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பகனி தொடக்க உரையாற் றினார். வைக்கம் போராட்ட நூற்றாண்டை பற்றி விரிவாகவும் போராட்டத்தின் விளைவாக ஏற் பட்ட பலன்களை பற்றியும் எடுத் துக் கூறினார்.
தொடர்ந்து திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை சிறப்புரையாற்றினார். அவரது உரையில் கலைஞர் செய்த சாதனை களையும், கலைஞர் அவர்களால் பெண்கள் பெற்ற பலனையும், சொத்துரிமை முதல் இன்று திராவிட மாடல அரசால் வழங்கப் படும் காலை சிற்றுண்டி வரை பேசினார்.
தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ஒன்றிய அரசு கொண்டு வரும் மாநில அரசுகளுக்கு எதி ரான அனைத்து திட்டங்களை பற்றியும், அவை எதிர் கொண்டு வெற்றி பெறும் திராவிடர் ஆட்சி பற்றி குறிப்பாக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித் தும், விளக்கமாகவும் விரிவாகவும் பேசினார். இறுதியாக திராவிட மாணவர் கழக தோழர் வி.யாழ்ஒளி நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்: மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் துரை.அருண், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்கள் இரா.பிரபாகரன் மற்றும்
ச.மகேந்திரன், இளைஞ ரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், பொறியாளர் ஈ.குமார், மா.இராசு, நா.பார்த்திபன், இ.ப. சீர்த்தி, பகலவன், பெரியார் பிஞ்சு மகிழன், மு.ரவீந்திரன், ச.சந்தோஷ, இரா.மாரிமுத்து, ச.சந்தோஷ், ச.மாரி யப்பன, மு.பாரதி, ஜெ.சொப் பன சுந்தரி, உ.சந்தீப். சு.செல்லப்பன், சு.தமிழினி தாணு, கனிஷ்கா, கோ. குமாரி, சு.பவித்ரா,பெரியார் பிஞ்சு ப.சு.பிறைமித்ரா, க.கலைமணி, இரவீந்திரன், பர்தீன், எம்.முரு கேஸ்வரி, எம். மலைக் கண்ணன், உள்ளிட்டோர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment