சென்னை, செப். 10 - மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி செல்லும் வகையில் மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக் களின் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை மற்றும் மான்டஸ் புயலின் போது மழை நீர் சாலைகளில் தேங்காமல் புதிதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால்கள் வாயிலாக நீர்நிலை ஆறுகள் மற்றும் கால்வாயில் அனுப்பப்பட்டது.
பொதுமக்கள் எந்த வித இடர்ப்பாடும் இன்றியும் போக்குவரத்து இடையூறு இன்றியும் சென்றிட இதில் வழிவகை செய்யப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆலந்தூர்,பெருங்குடி ,சோழிங் கநல்லூர் மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளாத 5 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.20,000 அபராதமும், விளக்கம் கேட்டு மாந கராட்சி தாக்கீது அனுப்பியுள்ளது. மீண்டும் விதிகளை மீறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment