புதுடில்லி, செப்.28- உயர்நீதிமன்ற நீதி பதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர் களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது. இதனால் வழக்குகளை முடிக்க முடி யாமல் உயர்நீதிமன்றங்களில் காத்துக் கிடக்கின்றன.
இதற்கிடையில், நீதிபதிகள் நிய மனம் தொடர்பாக பெங்களூரு வழக் குரைஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக் காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், இந்த வழக்கு குறித்து 10 நாள்களுக்கு ஒரு முறை நீதிபதிகளின் பரிந்துரைகள் குறித்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத் தினர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற அமைப்பை ஒன்றிய அரசு சிதைக்கிறது என ஒன்றிய மேனாள் அமைச்சர்
ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "உயர் நீதிமன்றங் களுக்கு நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட 70 பரிந்துரைகள் அரசிடம் பல மாதங் களாக நிலுவையில் இருப்பது ஏன்?
கொலிஜீயத்தின் பரிந்துரைகளின் படி நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அரசாங்கம் அழித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment