சென்னை, செப். 25- அதிமுக கூட் டணியில் பாஜக இல்லை என்று மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த 18ஆம் தேதி எடுத்த நிலைப் பாட்டில் எந்த மாறுபட்ட கருத் தும் இல்லை.
வட்ட செயலாளர்கள் கூட் டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது.
வருமானவரிச் சோதனை பூச் சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக வினர் பயப்பட மாட் டார்கள்.
மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப் பாடு குறித்து முடிவெடுக் கப்படும்.
1972 முதல் அதிமுக பல சோதனைகளை தாண்டி வந்த இயக்கம். தமிழ்நாடு மக்களின் பிரச்சினைகளுக்காவே ஒன்றிய அமைச்சரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேசினர். ஒன்றிய அமைச் சரிடம் கட்சி சார்ந்து எதுவும் பேசவில்லை. பல நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அதிமுகவை இரு முறை ஜெயலலிதா வெற்றிப்பெற வைத்தார். இவ்வாறு அவர் கூறி னார்.
No comments:
Post a Comment