தஞ்சாவூர், செப். 13- தஞ்சை தெற்கு ஒன்றியம் விளார் ஊராட்சி பர்மா காலனியில் 9.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் ஆட்சி விளக்க தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை மாநகர தலைவர் பா. நரேந்திரன், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த் தன் ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினர். மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல் கருத்துரையாற்றி னார்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையுரையாற் றினார். திராவிடர் கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் சிறப்புரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்ன ரசு இயக்கப் பாடல்களை பாடினார். அவரைத் தொடர்ந்து முக்கரை க.சுடர்வேந்தன் அவர்கள் மூடநம்பிக்கைகளை முறியடிக்கின்ற வகையில் மந் திரமா? தந்திரமா? எனும் அறிவியல் நிகழ்ச்சியினை நடத்தி விளக்கமளித்தார். இறுதியாக அழகு இராமகிருஷ்ணன் நன்றி யுரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், மாநில கிராம பிரச்சார அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழ கன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில பெரியார் வீரவிளையாட்டுக் கழக செய லாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே. இராஜவேல், மாவட்ட தொழி லாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி பொருளாளர் போட்டோ மூர்த்தி, மாவட்ட வழக்குரை ஞரணி செயலாளர் க.மாரி முத்து, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் பேராசிரியர் கு.குட்டிமணி, தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநகர துணை தலைவர் செ.தமிழ் செல்வன், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.வீரக்குமார், கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை பெ.கணேசன், அண்ணா நகர் பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர் கி.சவுந்தர்ராஜன், மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் ப.விஜயக்குமார், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அ.சுப்பிரமணியன், மாவட்ட மாணவர் கழக தலைவர் ச.சிந்தனையரசு, மாநகர இளை ஞரணி துணை தலைவர் அ. பெரியார்செல்வன், உரத்தநாடு ஒன்றிய தெற்கு பகுதி செய லாளர் இரா.மோகன்தாஸ், தமிழ்நாடு பெரியார் கட்டு மான அமைப்புசாரா தொழி லாளர் நலசங்க உரத்தநாடு ஒன்றிய தலைவர் துரை. தன்மானம், கழக தோழர்கள் நெல்லுப்பட்டு நாகராசு, பொறியாளர் பாலகிருஷ்ணன், பெரியார் நகர் மகேஸ்வரன், பொன்னாப்பூர் சுப்ரமணியன், தெற்கு நத்தம் ச.முத்துசெல்வன், செல்லையன். பகுத்தறிவாளர் கழக தோழர் க.சேகர், மாத் தையா உத்தமன், பொறியாளர் சந்திரகாசன். திமுக தோழர்கள் தஞ்சை மாநகர பொருளாளர் காளையார் சரவணன், மருங் குளம் ஒன்றிய குழு உறுப்பினர் அறிவுடைநம்பி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் வீரையன், மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் புதுப்பட்டினம் பாலு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கேபிள் ரவிச்சந் திரன், திமுக இலக்கிய அணி மாநகர துணை தலைவர் மாரி யப்பன், விழா ஒன்றிய குழு கவுன்சிலர் சாமி சரவணன், 38ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரம்யா சரவணன், 39ஆவது வட்ட பிரதிநிதி ஜோசப் தனிஷ் லாஸ், மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் செல்ல.கலைவாணன், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், ராசு.முனியாண்டி மற்றும் பொது மக்களும், கழக பொறுப் பாளர்களும், தோழர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment