நாகை, செப். 3 - நாகை மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியாரும் - தமிழ்நாட்டு கல்வியும் என்ற தலைப்பில் 27.8.2023 அன்று சிறப்பானதொரு கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் இரா.தியாக சுந்தரம் தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செயலாளர் சி. தங்கையன் வரவேற்புரை ஆற்றி னார். இணைப்புரையாக திருவா ரூர் பகுத்தறிவு ஆசிரியர் அணி மண்டல அமைப்பாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் செந்தமிழ் செல்வி ஆகியோர் உரையாற்றி நிகழ்வை துவங்கி வைத்தார்.
மேனாள் பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர் ஆசிரியர் முனியாண்டி இயக்கப் பாடல்கள் பாட கருத்தரங்கம் சிறப்பாக தொடங்கியது.
கருத்தரங்கில் தொடக்க உரை யாக பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் இரா.சிவக் குமார் பேசினார். அவர் தம் உரை யில் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் தற்போதைய தேவை பற்றியும் தமிழ்நாடு முழுவதும் அதை கட்டமைக்கும் அவசியம் பற்றியும் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில கலந்துரையாடல் மற்றும் பகுத் தறிவு ஆசிரியர் அணி மாநாடு தமி ழர் தலைவர் தலைமையில் நடை பெற வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினார்.
கருத்தரங்கில் சிறப்பு உரையாக பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன் பேசும் பொழுது ஆசிரியர்கள் பெரியாரியல் கருத்துகளை பாட கருத்துகள் மூலம் மாணவர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, தாங் கள் இருக்கும் பள்ளிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்துவது, சக ஆசிரி யர்களை எப்படி பகுத்தறிவு ஆசிரி யர் அணியில் சேர்ப்பது, பகுத்தறிவு ஆசிரியர் அணியை அடுத்த கட்டத் திற்கு கொண்டு செல்ல பொறுப் பாளர்கள் நாம் என்ன செய்வது என்கின்ற செயல்பாடுகள் சார்ந்த தெளிவுரை வழங்கினார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில் ஆசிரியர் சமூகமானது தற்போது ஆளும் திராவிட மாடல் ஆட்சி யின் கீழ் பணி புரிவதால் உள்ள சிறப்பு பற்றியும், கடந்த கால ஆட்சியில் ஆசிரியர் சமூகம் பட்ட துயரங்கள் பற்றியும், ஆர்.எஸ்.எஸ். போன்ற ஹிந்துத்துவா சக்திகள் கல்வித்துறையை எவ்வாறு கைப் பற்றப் பார்க்கின்றன என்றும் அத னால் ஏற்படும் அபாயம் பற்றியும் அதனை தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னரே அதனை அறிந்து அவற்றை எவ்வாறு முறியடித்தார் என்றும், பகுத்தறிவு ஆசிரியர் அணி மென்மேலும் வளர்வதற் கான வழிகள் பற்றியும் தெளிவான தொரு உரை ஆற்றினார்.
சிறப்பு வாய்ந்த இக்கலந்துரை யாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், மாவட்ட செயலா ளர் புபேஷ் குப்தா, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஜீவா, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட துணை செயலாளர் ஆண்ட்ரூஸ், நாகை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி ஒன்றிய அமைப்பாளர் இரமேஷ், கீழையூர் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் பத்மநாபன், திரு மகள் ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் வீரபிரபாக ரன், மேலும் ஆசிரியர்கள் முனை வர்.சிவகுமார், ஜெயகுமார், அண் ணாதுரை, சரவணன், ஆகியோர் பகுத்தறிவு ஆசிரியர் அணியில் தன்னை ஆர்வமுடன் இணைத்து கொண்டார்கள்.
கருத்தரங்க நிகழ்வின் இறுதி யாக நாகை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி துணைத்தலைவர் அலமேலு நன்றியுரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment