சத்தியமூர்த்தி என்பவரை ஆசிரியராகக் கொண்ட தினமலரின் ஒரு பகுதி மட்டும் தான் இவ்வாறு எழுதியது. நாங்கள் எழுதவில்லை என்று தமிழ்நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலை காரணமாக ராமசுப்பு கதறியிருக்கிறார். மேலும் வழக்குத் தொடுப்போம் என்றெல்லாம் கூவியிருக்கிறார். அது அவர்களின் பங்காளிச் சண்டைக்கு இதனை ஒரு வாய்ப்பாகக் கருதி மோதும் சட்டச் சாக்கு! அதற்குள் நாம் போக வேண்டாம்.
ஆனால், ஏதோ தாங்கள் புனிதர்கள் போலவும், ஜாதி வன்மம் தங்களுக்கு இல்லாதது போலவும் ஒரு பம்மாத்து நாடகத்தை நடத்தப் பார்க்கிறார் ராமசுப்பு.
கடந்த வாரம் வெளிவந்த வாரமலரில், ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் முதலமைச்சர், ஒரு வேளை உற்சாக பான விருந்தாக இருந்திருந்தால் போயிருப்பார் என்று அபாண்டமாக எழுதியது இதே தினமலர் ராமசுப்பு என்ற அந்துமணி தான்!
பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்தால், ஊர் சுற்றி நாளடைவில் குடும்பத்தில் சிக்கல் வரலாம் என்று எழுதியதும் இதே தினமலர் தான்!
தினத்தந்தியை சவரம் செய்த கிரீம் வழிக்கப் பயன்படும் நாளேடு என்று தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டிய ஜாதிய வன்மம் பிடித்தது இதே தினமலர் கும்பல் தான்!
ஆஷ்துரைக்கு ஒரு வாஞ்சிநாதன், காந்தியாருக்கு ஒரு கோட்சே போல வீரமணிக்கு ஒருவன் வருவான் என்று பயங்கரவாதப் பார்வையோடு எழுதியதும் இதே தினமலர் தான்!
மூவர் தூக்கிலிருந்து விடுதலை ஆகவேண்டி செங்கொடி தீக்குளித்த செய்தியை காதல் தோல்வியால் தற்கொலை என்றெழுதியது இதே தினமலர் தான்!
நாள்தோறும் சமூகநீதி, மதச்சார்பின்மை, சமத்துவச் சிந்தனைகளுக்கெதிராக விஷத்தை விதைத்துக் கொண்டிருப்பது இதே தினமலர் கும்பல் தான்!
தோண்டத் தோண்ட தினமலநாற்றம் குடலைப் பிரட்டும்!
இதையெல்லாம் இல்லையென்று மறுக்கப் போகிறாரா ராமசுப்பு?
இந்தத் தினமலம், அந்தத் தினமலம் எல்லாம் ஒரே செப்டிக் டாங்கில் ஊறிக் கொண்டிருப்பவை தான்!
- பிரின்சு என்னாரெசு பெரியார்
முக நூலிலிருந்து....
No comments:
Post a Comment