திராவிட இயக்க வரலாற்றில் குறிக்கப்படுவது மட்டுமல்ல - பொறிக்கப்படும் இந்த நாள் கவிஞர் வைரமுத்து புகழாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 15, 2023

திராவிட இயக்க வரலாற்றில் குறிக்கப்படுவது மட்டுமல்ல - பொறிக்கப்படும் இந்த நாள் கவிஞர் வைரமுத்து புகழாரம்

சென்னை, செப் 15 கலைஞர் மகளிர் உரி மைத் தொகைத் திட் டம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; "பேரறிஞர் அண்ணா வின் பிறந்த நாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தாய்க் குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியா தைக்கும் பக்கபலமிருந்து தக்கபயன் நல்குவதாகும்.

திராவிட இயக்க வரலாற்றில் இந்த நாள் குறிக்கப்படுவது மட்டுமல்ல பொறிக்கப்படும். இந்தியாவின் பிற மாநிலங்களும் தளபதி ஏற்றி வைக்கும் இந்தத் திருவிளக்கில் தீபமேற்றிக் கொள்ளலாம்." இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment