அரூர், செப். 15- அரூர் கழக மாவட்டம் கடத்தூரில் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் -அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் 9.9.2023ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு. யாழ் திலீபன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செய லாளர் பூ.வினோத்குமார் வரவேற் புரையாற்றினார். மாநில கலைத் துறை செயலாளர் மாரி. கருணா நிதி, திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட திராவிடக் கழக தலைவர் கு.தங்கராஜ், மாவட்ட செயலாளர் சா.பூபதிராஜா,பொதுக்குழு உறுப் பினர் இரா. சேட்டு, ஒன்றிய தி.மு.க. செயலாளர் இரா.பிரகாசம் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். தி.மு.க. மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சா.சுர்ஜித், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் வா.தனுசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ச. பாலையா ஆகியோர் தொடக்க உரை யாற்றினர்.
பகுத்தறிவு ஆசிரியரணித் தோழர் த.மு. சுடரொளி கருத்து ரையாற்றினார்.
தொடர்ந்து கழக சொற் பொழி வாளர் பூவை. புலிகேசி பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற் பாட்டை விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் மா. சரவணன், வாசகர் வட்ட செயலாளர் கே.ஆர். சி. தங்கராஜ் ஆகியோர் செய்திருந் தனர். ஒன்றிய கழக தலைவர் பெ. சிவலிங்கம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தீ.சிவாஜி, செயலாளர் மு.பிரபாகரன், மாவட்ட மாணவர் தலைவர் இ. சமரசம் இளைஞரணி மாணவர் கழக பொறுப்பாளர்கள் சூர்யா, பி.அய் யனார், கு.அரிகரன், ப.பெரியார், மேனாள் திமுக ஒன்றிய செயலா ளர் ஜெகநாதன், மதன் பாலாஜி, கார்த்திக், பிரகாஷ், சுரேஷ்,மதிமுக நகர செயலாளர் க. தி.சிவசங்கரன், வேப்பிலைப்பட்டி திமுக நிர்வாகி கள் கணேசன், தமிழரசன், அமுல் செல்வம், அசோகன், மயில் குப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிவன், ஜெகநாதன், சத்ரபதி, பவுத்த அறநெறியாளர் சங்க செயலாளர் கு.தம்மசீல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.
No comments:
Post a Comment