திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம் ராயநல்லூர் பொன்முடி இல்லத்தில் நடைபெற்றது. தந்தை பெரியாருடைய 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வேன் மூலம் பரப்புரை செய்வதும், திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரம், கோட்டூர் ஒன்றியம், முத்துப்பேட்டை ஒன்றியம் ஆகிய ஊர்களில் உள்ள கழகத் தோழர்கள் கொடி ஏற்றியும் தந்தை பெரியார் படத்திற்கும், தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் சிறப்போடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. செப்டம்பர் 17 அன்று காலை 7:30 மணிக்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி-08:00, மீனம்பநல்லூர் - 08:30, மேட்டுப்பாளையம்-09:00, விளக்குடி-09:15, இராய நல்லூர்-09:30, விக்கிரபாண்டியம்-10:00, கோட்டூர்-10:30, சித்த மல்லி-11:30, பெருகவாழ்தான்-11:10, தெவதானம்-12:00, திருத்துறைப் பூண்டி-01:00, ஆலங்குடி-01:30, பன்னத்தெரு-02:00
No comments:
Post a Comment