மலைப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு
ஆயுதம் தாங்கிய காவல் படை பாதுகாப்பாம்!
திருப்பதி, செப்.29 திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர்மூலம் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது என்று தேவஸ்தானத் தலைவர் பி.கருணாகர ரெட்டி சென்னையில் கூறினார்.
சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் திருமலைக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந் துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வலை மற்றும் கூண்டு அமைத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சிறுத்தைகளைப் பிடிக்க வலை அமைக்கப்பட்டுள்ளது. 170 வனத்துறையினர் சிறுத்தைகளை இருக்கும் இடத்தைத் தேடி வருகின்றனர்.
எனவே குழந்தைகளுடன் வருபவர்கள் பகல் 2 மணிக்கும், பெரியவர்கள் இரவு 10 மணி வரையும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள் மற்றும் வனத்துறையினர் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமின்றி செல்ல லாம். நடந்து செல்லும் பகுதிகளைக் கூண்டு போல் அமைக்கவும் பரிசீலனை நடந்து வருகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment