திருநெல்வேலி: பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

திருநெல்வேலி: பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை

நெல்லை, செப். 20- செப்டம்பர் -17 அன்று மாலை ஆறுமணிக்கு  மத்திய மாவட்ட திமுக அலுவலக கூட்ட அரங்கில்  திராவிட மாண வர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மற்றும்  சிறப்புக் கருத்தரங்கம் மாவட்ட திராவிடர் கழகத் தலை வர்  ச. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட மாணவர் கழக செயலாளர் செ.சூர்யா வரவேற்பு ரையாற்றினார். மாவட்ட இளை ஞரணி செயலாளர் வீரவநல்லூர் மு.தமிழ்ச்செல்வம், தென்காசி மாவட்ட திராவிட மாணவர்கழக பொறுப்பாளர் ஊத்துமலை சீ.செங்கதிர் வள்ளுவன், கழக காப் பாளர் இரா.காசி ஆகியோர் உரை யாற்றினார்கள். திராவிடர்கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்கவுரையாற்றி னார்.

தொடர்ந்து தந்தை பெரியார் கூறிய மூன்று பேய்கள் அய்ந்து நோய்கள் என்ற தலைப்பில் தொடங்கிய  கருத்தரங்கில் மூன்று பேய்கள்என்ற தலைப்பில் கழக காப்பாளர் மா. பால் இராசேந்திரம் அய்ந்து நோய்கள் என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர் இரா.வேல் முருகன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

நிறைவாக கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றி னார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தின் தீர்மானம் குழு உறுப்பினர் சுப.சீத்தாராமன் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்களும் உரையினை கேட்டு பாராட்டு தெரிவித்து  சால்வை அணிவித்தும்  புத்தகங்கள் வழங்கியும் சிறப்பித்தார்கள். 

மத்திய மாவட்ட திமுக அலு வலக கூட்ட அரங்கில் விழா நடத் துவதற்கு அனுமதி அளித்து  அனைத்து உதவிகளும் செய்து தந்த மேனாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் அவர்களுக்கும், அலு வலக பொறுப்பாளர் அருண்குமார் அவர்களுக்கும் பங்கேற்ற அனை வருக்கும் மாணவர் கழக ஆகாசு   நன்றி கூற   விழா நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment