ஒரே செங்கல்லை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்: சு.வெங்கடேசன் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

ஒரே செங்கல்லை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள்: சு.வெங்கடேசன் விமர்சனம்


மதுரை, செப். 2
- ஒரே செங் கலை வைத்து எத்தனை விதமான அதிர்ச்சியை வழங்குவீர்கள் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்ச னம் செய்துள் ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமா னப் பணிகள் 4 ஆண்டு களாக தொடங்கப்படாத நிலையில் அண்மையில் தான் அதற்கான ஒப்பந் தம் கோரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்த புள்ளி தேர்வு செய்வதற் கான ஆலோசனைகளை வழங்குவதற்கு 6 நிறுவ னங்கள் தேர்வு செய்யப் பட்டு 3 நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள் ளது. இவற்றில் சேலத் தைச் சேர்ந்த முகேஷ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சகம் தேர்வு செய்துள்ளது.

இதற்கு எதிராக 3 நிறுவங்களின் ஒன்றான லக்னோவைச் சேர்ந்த ஆர்ச்-என் நிறுவனம் பர பரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது. முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவ னம் மீது ரூ.1,528 கோடி ஊழல் புகார் உள்ளது என்றும் இந்நிறுவனம் சிபிஅய் வளையத்தில் உள்ளதாகவும் ஆர்ச்-என் நிறுவனம் குற்றச்சாட்டி யுள்ளது. முகேஷ் அசோ சியேட்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் உரிய விதிகள் பின்பற்றப்பட வில்லை எனவும், ஒப் பந்த விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக வும் புகார் தெரிவிக்கப்பட் டுள்ளது.

HITES போன்ற அனுபவம் வாய்ந்த நிறு வனங்களை புறக் கணிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆர்ச்-என் நிறு வனம் வழக்கமாக ஆன் லைனில் நடைபெறும் நிறுவனத் தேர்வு ஆஃப் லைனில் நடத்தப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வழக்குகள் குற்றம் பின்னணி உள்ள நிறுவனங்கள் பங்கேற் பதை தடை செய்யும் அம் சம், விண்ணப்ப படிவத் தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் ஆர்ச்-என் நிறுவனம் குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முகேஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் திட்டவட்ட மாக மறுத்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங் கடேசன் தனது டிவிட் டர் பக்கத்தில் கூறியதா வது; 

திட்ட ஆலோசக நிறு வனத் தேர்வில் முறை கேடு குற்றச்சாட்டு. சிபி அய் வளையத்தில் சிக்கி யுள்ள நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதலா?. ஒரே போன் நம்பரில் 7.5 லட்சம் மருத்துவக் காப் பீட்டு அட்டை பதிவு செய்ததைப் போல, ஒரே செங்கல்லை வைத்து எத் தனை விதமான அதிர்ச் சியை வழங்குவீர்கள்!. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment