குலத் தொழில் கல்வியை முறியடிக்க ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவோம் வாரீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

குலத் தொழில் கல்வியை முறியடிக்க ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவோம் வாரீர்!

மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பாளர்கள் அறிக்கை

நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 மூலம் தடம் பதித்து விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்ட இந்தியா என்னும் நிலையில், ஒன்றிய அரசு குலத் தொழில் கல்வியை (விசுவகர்மா யோஜனா) மீண்டும் கொண்டு வர முயற்ச்சிப்பது நம்மை பின்நோக்கி அடிமைதனத்திற்கு அழைத்துச் செல்லும் அவலம் என்பதை கல்வியாளர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் அதனை விரட்டியடிக்கவும். அடியோடு ஒழிக்கவும் உரிமைக் குரல் எழுப்ப ஓரணியில் திரள வேண்டியது அவசியமாகும். ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போரா டியது போல் பிரதமர் மோடி அவர்களின் விசுவ கர்மா யோஜனா திட்டத்தினை முறி யடிக்க தலைவர் ஆசிரியரின் துணையுடன் ஒன்றிணைந்து போர்க் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்னும் எத்தனைக் காலத்திற்கு முடி திருத்தும் தொழிலாளி, சலவை செய்யும் தொழிலாளி, மண்பாண்டம் செய்யும் தொழி லாளி, தச்சு வேலை செய்யும் தொழிலாளி, செருப்பு தைக்கும் தொழிலாளி, மலம் அள்ளும் தொழிலாளி, இவர்களின் வாரி சுகள் மீண்டும் மீண்டும் இதே தொழிலை செய்ய வேண்டுமென்று நினைப்பதும், அதற்காக திட்டமிடுவதும், அயோக்கியதனம் அல்லவா? இவர்கள் படித்து மேம்பட்ட நிலைக்கு வரக்கூடாதா? இவர்களில் பலர் அரசு அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும் வரக்கூடாதா? இன்னமும் ஜாதிய சனாதன கொள்கை அடிப்படையில் குலத் தொழில் கல்வி மூலம் இவர்களின் எதிர்காலத்தைத் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்வது நியா யமா? இந்த நிலையை மாற்ற வேண்டும்.

குலத்தொழிலை வைத்து மனித இனத்தை இழிநிலைக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட விசுவ கர்மா யோஜனா திட்டத்தை விரட்டி அடிக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும், கடமையுமாகும். திராவிடர் கழகம் ஏற்பாடு செய்யும் சமூக நீதிக்கான கூட்டத்திற்கு தமிழ்நாடு மருத்துவ சமுதாயப் பேர வையைச் சார்ந்த தோழர்கள் பெரு மளவில் கலந்து கொண்டு நமது எதிர்ப்பை 06.09.2023 அன்று மாலை 4.00 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் தெரிவிக்க வாரீர்! வாரீர்!

திராவிட மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பாளர்கள்: 

வழக்குரைஞர்  ம.இரவி பாரதி (மேனாள் தலைவர், தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவை),  குமாரசாமி, வெங்கிரு பழனி, எம். எம் முனுசாமி, எம். முருகன், எம்.கே பிரியதர்ஷன்.


No comments:

Post a Comment