நடப்பது சாணக்கியன் ஆட்சிதான் நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

நடப்பது சாணக்கியன் ஆட்சிதான் நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., உரை

புது­டில்லி, செப். 21 - நூறு ஆண்­டு­க­ளுக்கு மேலாக மகத்­தான அடை­யா­ள­மா­கத் திகழ்ந்து வரும் புகழ்­பெற்ற இந்­திய நாடா­ளு­மன்ற கட்­டடத்­தில் கடை­சிக் கூட்­டம் 2023 செப்­டம்­பர் 18 திங்­க­ளன்று நடந்து முடிந்­தது. செப்­டம்­பர் 19 செவ்­வா­யன்று, மோடி அரசு புதி­தாக கட்­டி­யுள்ள நாடா­ளு­மன்ற கட்­ட­டத்­திற்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இடம்­பெ­யர்­கி­றார்­கள். இதை­யொட்டி, நாடா­ளு­மன்­றத்­தில் 18.9.2023 அன்று நடை­பெற்ற சிறப்பு அமர்­வில், கடந்த 75 ஆண்­டு­கா­ல­மாக இந்த நாடா­ளு­மன்­றம் ஆற்­றிய மகத்­தான பணி­களை நினை­வு­கூர்ந்து அனைத்­துக் கட்­சி­க­ளின் உறுப்­பி­னர்­க­ளும் உரை­யாற்­றி­னர். இந்த அமர்வை துவக்கி வைத்து பிர­த­மர் நரேந்­திர மோடி உரை­யாற்­றி­னார். 

மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி சார்­பில் மதுரை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் ஆற்­றிய உரை வருமாறு: புகழ்­மிக்க நாடா­ளு­மன்­றத்­தின் 75ஆவது ஆண்டு சிறப்பை நினைவு கூர்­கிற இந்த தரு­ணத்­தில் இந்­தி­யா­வின் வலி­மைக்­கும் செழு­மைக்­கும் கார­ண­மாக இருந்த இந்த அவை­யில் பங்­க­ளிப்பு செய்த அனை­வ­ரை­யும் வணங்கி மகிழ்­கின்­றேன். அர­சி­யல் சாச­னத்தை நிறை­வேற்­றிய நம்­மு­டைய முன்­னோர்­களின் குரல் எதி­ரொ­லித்த அவை இது. ஆங்­கி­லே­யர்­க­ளி­ட­மி­ருந்து அதி­கா­ரத்தை கைமாற்­றிய பொழுது “விதி­யோடு ஓர் ஒப்­பந்­தம் செய்­கி­றோம்'' என்ற ஒரு புகழ்­மிக்க உரையை ஜவ­ஹர்­லால் நேரு நிகழ்த்­திய அவை இது. இந்த அவை­யி­னு­டைய மேன்மை இந்த கட்­ட­டத்­தையோ, இந்த கட்­டிடடக்­க­லை­யையோ, இந்த கட்­ட­டத்­தின் பொறி­யி­ய­லையோ சார்ந்­த­தல்ல; இந்த கட்­டடத்­தின் மேன்மை இந்த அவை எடுத்த முடி­வு­கள் சார்ந்­தது. அந்த முடி­வு­க­ளில் பின்­பற்­றப்­பட்ட கோட்­பா­டு­கள், தத்­து­வங்­கள் சார்ந்­தது.

இந்த அவை தான் மொழி வழி மாநி­லங்­களை உரு­வாக்­கி­யது; இந்த அவை தான் மன்­னர் மானி­யத்தை ஒழித்­தது; இந்த அவை­தான் பொதுத்­துறை எனும் நவீன கோவில்­களை உரு­வாக்­கி­யது; வங்­கி­கள் தேசி­ய­ம­யம், இன்­சூ­ரன்ஸ் தேசி­ய­ம­யத்தை உரு­வாக்­கி­யது; ஏக போகத்­திற்கு கட்­டுப்­பா­டு­கள் விதித்­தது; உள்­ளாட்­சிக்கு கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கி­யது, மகாத்மா காந்தி ஊரக வேலை­வாய்ப்பு திட்­டம், தக­வல் உரி­மைச் சட்­டம் ஆகி­ய­வற்­றைக் கொண்டு வந்­தது. இந்த சட்ட வடி­வங்­கள் அனைத்­திற்­கும் பின்­னால் அவைக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் போரா­டிய கம்­யூ­னிஸ்­டு­க­ளின் மகத்­தான பங்­க­ளிப்பு இருக்­கி­றது என்­பதை இந்த நேரத்­தில் பதிவு செய்ய கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

நாடா­ளு­மன்­றத்­தின் வாச­லில் ஒரு வாக்­கி­யம் இருக்­கி­றது: “ஒடுக்­கு­மு­றைக்கு ஆளாகி இருக்­கி­ற­ யாராக இருந்­தா­லும் அவர்­கள் இந்­தி­யாவை தங்­கள் இல்­ல­மாக கரு­த­லாம்” என்று எழுதி வைத்­தி­ருக்­கி­றார்­கள். எவ்­வ­ளவு உயர்ந்த சிந்­தனை! இந்த தேசம் உல­கத்­திற்­குச் சொல்ல நினைக்­கிற ஒரு சிந்­தனை. இந்­தச் சிந்­த­னையை உரு­வாக்­கிய நம்­மு­டைய முன்­னோர்­­களின் நினை­வு­கள் சூழ்ந்த ஒரு அவை இது.

சமத்­துவ இந்­தியா எனும் கனவு

அர­சி­யல் சாச­னத்­தின் அமர்­வு­கள் 1083 நாட்­கள் நடந்­தன. அந்த விவா­தங்­க­ளி­னு­டைய நினை­வு­கள் சூழ்ந்து இருக்­கின்ற ஓர் அவை இது. அர­சி­யல் சாச­னத்­தி­னு­டைய குறிப்­பு­கள் எழு­தப்­பட்ட ஏடு­க­ளிலே நம்­மு­டைய முன்­னோர்கள் எல்லா மொழி­யி­லும் கையெ­ழுத்­திட்டு இருக்­கி­றார்­கள். ஆங்­கி­லத்­தில், உரு­து­வில், ஹிந்­தி­யில், சமஸ்­கி­ரு­தத்­தில், தமி­ழி­லும் கையெ­ழுத்­திட்டு இருக்­கி­றார்­கள். மு. சி. வீர­பாகு அவர்­கள் தமி­ழிலே கையெ­ழுத்­திட்டு இருக்­கி­றார். நான் ஏன் இதைச் சொல்­கி­றேன் என்­றால், பன்­மு­கப்­பட்ட இந்­தியா - அனைத்து மொழி­க­ளுக்­கு­மான சமத்­துவ இந்­தியா தான் நம்­மு­டைய முன்­னோர்­கள் கண்ட கன வினு­டைய அடிப்­படை.

பகத்­சிங்­கின் கர்­ஜனை 

எதி­ரொ­லிக்­கி­றது!

இந்த அவை அர­சி­யல் சாச­னத்­தின் நினை­வு­கள் மட்­டு­மல்ல.. விடு­த­லைப் போராட்­டத்­தி­னு­டைய தழும்­பு­கள் நிறைந்த ஒரு அவை. பகத்­சிங் கர்­ஜித்த எதி­ரொலி இந்த அவை முழு­வ­தும் இந்த அரங்­கம் முழு­வ­தும் படிந்­துள்­ளது. அண்­ணல் காந்தி, அம்­பேத்­கர், நேரு என்று மகத்­தான தலை­வர்­க­ளின் சிலை­க­ளும் உரு­வங்­க­ளும் நிறைந்து இருக்­கிற அவையை விட்­டு­விட்டு நாம் ஒரு புதிய கட்­ட­டத்­திற்கு செல்ல இருக்­கின்­றோம். அர­சி­யல் சாச­னத்­தின் நினை­வு­களை அகற்­றி­விட்டு சாணக்­கி­ய­னின் உரு­வம் பொறித்த ஒரு இடத்­திற்கு இந்­தியா கொண்டு செல்­லப்­பட இருக்­கி­றது.

நாம் எங்கே நகர்­கி­றோம்?

சாணக்­கி­ய­னுக்­கும் ஜன­நா­ய­கத்­திற்­கும் என்ன சம்­பந்­தம்? தனது முதல் பொதுத் தேர்­த­லிலே அனை­வ­ருக்­கும் வாக்­கு­ரிமை கொடுத்த ஓர் அவை இந்த அவை. உல­கத்­தின் பல நாடு­கள் நூற்­றாண்­டு­ க­ளாக கண்ட கனவை தனது முதல் தேர்­த­லி­லேயே நிறை­வேற்ற முடிவு எடுத்த இந்த அவை­யி­லி­ருந்து, முடி­யாட்­சி­யின் கொடூர தத்­து­வத்தை வார்த்­தை­க­ளால் வடித்த சாணக்­கி­ய­னின் முழு உரு­வச்­சிலை வைத்­தி­ருக்­கிற ஒரு அவை நோக்கி நாம் நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றோம். நண்­பர்­களே, இங்கே எல்­லாம் விடு­த­லைப் போராட்­டத்­தின் நினை­வு­க­ளாக இருக்­கி­றது என்­றால் அந்த கட்­டி­டத்­தில் எல்­லாமே புரா­ணங்­க ­ளின் வார்ப்­பு­க­ளாக இருக்­கின்­றன. இந்­தியா எங்கே செல்­கி­றது என்­பது மிக முக்­கி­ய­மான ஒரு கேள்வி. இங்கே குறிப்­பிட்­டார்­கள், படிக்­கட்டை நாங்­கள் தொட்டு வணங்கி உள்ளே வந்­தோம் என்று.! இருக்­க­லாம், ஆனால் இங்கே இருந்து வெளியே செல்­கிற பொழுது எதை விட்டு விட்­டுச் செல்­கி­றீர்­கள்? எத்­த­னையோ பிர­த­மர்­கள் இங்கே அமர்ந்­தி­ருக்­கி­றார்­கள்; எதிர்க்­கட்­சி­க­ளின் கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்லி இருக்­கி­றார்­கள்; விவா­தங்­க­ளில் பங்­கெ­டுத்து இருக்­கி­றார்­கள்; காது கொடுத்து கேட்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால் எதிர்க்­கட்­சி­க­ளின் கேள்­வி­க­ளுக்கு ஒரு­முறை கூட பதில் அளிக்­காத ஒரு­வர் என்­கிற நினை­வைத்­தானே இந்த அவை­யிலே நீங்­கள் விட்­டு­விட்­டுச் செல்­கி­றீர்­கள்!

மக்­கள் காப்­பார்­கள்!

இந்த தேசத்­தின் பல பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த அவை முடிவு கட்டி இருக்­கி­றது

கடந்த காலத்­தில்..! ஆனால் சமீப காலத்­தில் இந்த தேசத்­தின் பல பிரச்­சி­னை­கள் இந்த அவை யிலே இருந்­து­தான் துவங்­கு­கி­றது என்ற வருத்த மும் வலி­யும் சூழ்ந்து இருக்­கி­றது. நாடா­ளு­மன்­றம் என்­பது புதிய கட்­ட­டம் அல்ல, அது பின்­பற்­று­கின்ற கோட்­பா­டு­க­ளும் ஜன­நா­ய­கத்­திற்கு அளிக்­கப்­ப­டு­கின்ற மதிப்­பி­லும் தான் அதன் உயிர் இருக்­கி­றது. அந்த உயிரை நீங்­கள் காப்­பாற்­று­வீர்­கள் என்ற நம்­பிக்­கை­யில் அல்ல... 140 கோடி மக்­க­ளும் காப்­பாற்­று­வார்­கள் என்று நம்­பிக்­கை­யோடு புதிய அரங்கை நோக்கி நாங்­கள் அடி எடுத்து வைக்­கி­றோம். இவ்­வாறு சு.வெங்­க­ டே­சன் எம்.பி. உரை­யாற்­றி­னார்.


No comments:

Post a Comment