சென்னை, செப்.13- உலர் பழங்கள் விற்பனை என்று 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இணைப் புடன் (யு.ஆர்.எல்.லிங்க்) வந்த விளம்பரத்தை நம்பி சென்னையை சேர்ந்த நபர் 'இணைய வழி' மோசடி கும்பலிடம் பெருந்தொகையை இழந்துள்ளார். 'இணைய வழி' வர்த்தக நிறுவனத்தை போன்று போலித் தளங்களை உருவாக்கி இந்த மோசடி வலை விரிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சஞ்சய்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வழங்கி உள்ள அறிவுரைகள் வருமாறு:-
‘பேஸ்புக்'கில் உள்ள எந்த யு.ஆர்.எல்.களையும் நம்ப வேண்டாம். ஏனெனில் அவை சம்பந்தப்பட்ட தளத்தால் அங்கீகரிக்கப்படுவது இல்லை. எனவே 'இணைய வழி' மூலம் பொருட்களை வாங்குவதற்கு எப்போதும் அதிகாரப் பூர்வ வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டும்.
எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ் அப்மூலம் அனுப்பப்படும் செயலிகள், கோப்புகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.
எந்தவொரு நடவடிக்கையை எடுப்பதற்கு முன்பாக அழைப்பாளர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.
அசாதாரண சூழல் ஏற்பட்டால் வங்கிக் கணக்கு அறிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.
மோசடிக்கு உள்ளானால் உடனடியாக அந்த செயலியை அலைபேசியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் கிரெடிட் கார்டை முடக்கவேண்டும். பின்னர், 'சைபர்கிரைம்' கட்டண மில்லா 1930 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத் தில் புகார் அளிக்கலாம்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment