திருச்சி, செப். 16- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிக ளின் பாடம் சார்ந்த தனித் திறமைகளை பெற்றோர்க ளுக்கு வெளிச்ச மிட்டுக் காட் டக்கூடிய மாணவர் களின் தனித் திறன் மேம்பாட்டு விழா பள்ளியின் கலையரங்கத்தில் 8.9.2023, 9.9.2023 மற்றும் 11.9.2023 ஆகிய மூன்று நாட் கள் மிகச் சிறப்பாக நடை பெற்றது.
இந்த நிகழ்வு 8.9.2023 அன்று ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 9.9.2023 அன்று மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்க ளுக்கும், 11.9.2023 அன்று அய்ந் தாம் வகுப்பு மாணவர்களுக்கும் என வகுப்பு வாரியாக நடத் தப்பட்டது. நிகழ் வுக்கு பள்ளி யின் முதல்வர் டாக்டர் க.வனிதா தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வுகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய அனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் அடைந்த கற்றல் அடைவுகளாக பாடல், நாட கம், விடுகதை, பழமொழி, புதிர்கள் ஆகியவற்றை தங்கள் மழலை மொழியில் மேடை யேறி எவ்வித தடுமாற்றமும் இன்றி கூறியது அனைத்துப் பெற்றோர்களாலும் பாராட் டப்பட்ட ஒரு நிகழ்வாக அமைந்தது.மேலும், கணினி, அபாகஸ், யோகா, ஃபோ னிக்ஸ் போன்ற பாடம் சார் கற்றல் அடைவுகளும் மாண வர்களால் மேடையில் அரங் கேற்றம் செய்யப் பட்டன. இந்த நிகழ்வில் மாண வர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருந் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ் வுக்கான ஏற்பாடுகளை ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான அனைத்து ஆசிரி யர்களும் மற்றும் அலுவலகப் பணித் தோழர் களும் மிகச்சிறப் பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment