சென்னை, செப்.1- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கை யை ஏற்க மறுத்து, தமிழ்நாட்டுக்கென பிரத்யேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.
ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 உறுப் பினர்கள் அடங்கிய குழு அமைக்கப் பட்டது. இக்குழுவினர் ஓராண்டுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டு, அறிக்கையை தயாரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உறுப்பினர் களின் ஒப்புதல் பெறுவதற்கான பிரத்யேகக் கூட்டம் புதனன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பெரும் பாலான உறுப்பினர்கள் இந்த அறிக் கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். வரக்கூடிய நாட்களில் இந்த அறிக் கையை தமிழில் மொழிபெயர்க்க கூடிய பணிகள் நடைபெறும் என குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பணிகளை முடித்து செப்டம்பர் 4 ஆவது வாரத்தில் தமிழ்நாடு அரசி டம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment