புதுடில்லி, செப் 6 ஜி - 20 மாநாடு தொடர்பான அழைப்பிதழில் 'இந்தியா'வுக்கு பதில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெயர் மாற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத் துள்ளன. 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாட்னா, பெங்களூரு ஆகிய இடங்களை தொடர்ந்து, மும்பையிலும் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதற் கிடையே, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. டில்லியில், வருகிற9 மற்றும் 10-ஆம் தேதிகளில், ஜி-20 நாடுகளின் மாநாட்டை நடத்து கிறது. அதில், ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, சுமார் 40 நாடுகளின் பிரதிநிதி கள் கலந்து கொள்கிறார்கள்.
அழைப்பிதழ்
அவர்களுக்கு 9-ஆம் தேதி மாலை, குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு விருந்து அளிக்கிறார். அதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், 'இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக, 'பாரத ஜனாதிபதி' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. மேலும், ஜி-20 பிரதிநிதிக ளுக்காக 'பாரதம்-ஜனநாயகத்தின் தாய்' என்ற கையேடு தயாரிக் கப்பட்டுள்ளது.
அதில், ''பாரதம் என்பது நாட்டின் அதிகாரபூர்வ பெயர். அப்பெயர், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1946 முதல் 1948ஆ-ம் ஆண்டுவரை நடந்த விவாதங்களிலும் இடம்பெற்றுள் ளது'' என்று கூறப்பட்டுள்ளது. 'பாரதம்' என்று குறிப்பிட்டு இருப் பது, நன்றாக உணர்ந்து எடுத்த முடிவு என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அழைப்பிதழால் சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதற்கு பதிலாக, 'பாரத்' என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டு இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்ட தொடங்கி உள்ளன. 18-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இதுபற்றி விவாதம் நடத்தப்படும் என்ற தகவல்களும் பரவி வருகின்றன.
காங்கிரஸ்
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அரசியல் சட் டத்தின் 1-வது பிரிவு, இந்தியாவான பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறப்பட்டுள்ளது. இப் போது, மாநிலங்களின் ஒன்றியமும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக் கிறது.பா.ஜனதா தான், 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக் கத்தை முன் வைத்தது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, புதிய இந்தியா என்று கூறிவந்தது. ஆனால் நாங்கள், 'பாரத ஒற்றுமை பயணம்' என்று சொல்லி வந்தோம். பிரதமர் மோடி, வரலாற்றை திரிக் கலாம், இந்தியாவை பிளவுபடுத்த லாம். ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ''இந்தியா, பாரத் என்ற இரண்டுமே எங்களுக்கு சமம்தான். ஆனால், 'இந்தியா' என்ற பெயர் பா.ஜனதாவுக்கு அச்சத்தை உண்டாக்குவதால் மலிவான அரசியலில் ஈடுபடுகிறது'' என்று கூறியுள்ளார்.
மம்தா
மேற்கு வங்காள மாநில முதல்-அமைச்சர் மம்தா கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பெயர் மாற்றப் படுவதாக நான் கேள்விப்பட்டேன். ஆங்கிலத்தில் இந்தியா என்று சொல்கிறோம். ஹிந்தியில் பாரதம் என்று சொல்கிறோம். இதில் புதி தாக என்ன இருக்கிறது? இந்தியா என்றால் பாரதம் என்று நமக்கு தெரியும். ஆனால், உலகத்துக்கு 'இந்தியா' என்றால்தான் தெரியும். 'பாரதம்' என்று மட்டுமே கூற வேண்டும் என்று சொல்லும் அள வுக்கு என்ன நடந்து விட்டது? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால்
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ''இந்தியா கூட்டணியின் பெயரை 'பாரத்' என்று மாற்றிக் கொண்டால், 'பாரத்' என்ற பெய ரையும் ஒன்றிய அரசு மாற்றிவிடுமா?. இது தேசத்துரோகம்'' என்று கூறியுள்ளார்.சரத்பவார், ''நாட்டின் பெயரை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை'' என்று கூறியுள்ளார்.
ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ் ஜா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
"ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், கடந்த 1-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ''நமது நாட்டின் பெயரை 'இந்தியா' என்று கூறாமல், 'பாரதம்' என்று அழைக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டு இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment