அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மை அவசியம்மனுவின் சிலையை அகற்ற வேண்டும்
சென்னை, செப். 5 - அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2.9.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநாடு வலியுறுத்தியுள்ளது.
இந்த மாநாட்டில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மனிதர்களை பிறப்பின் அடிப் படையில் பாகுபடுத்தும் வர்ணா சிரம கோட்பாட்டை தொகுத் தெழுதிய மனுவின் சிலை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப் பூர் அமர்வாய வளாகத்தில் உள்ளது.
1989ஆம் ஆண்டு முதல் உள்ள அந்த சிலை அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே உடனடியாக அகற்ற வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பூஜை கள், புண்ணியார்த்தனம், யாகம் போன்ற ஒரு மதத்தின் சார்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறு கிறது. இது அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது.
எனவே, இவற்றை தடுப்பதோடு, குறிப்பிட்ட மதம் சார்ந்த வழி பாட்டு இடங்களை அரசு நிர்வா கிக்கக் கூடாது; புதியதாக அமைப் பதையும் அனுமதிக்கக் கூடாது.
ஜாதி, மதம் சார்ந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், பணிசார் நிலையில் கலந்து கொள் ளக்கூடாது. அனைத்து ஊர்களி லும் பொது மயானம் அமைக்க வேண்டும். ஒரு ஊர், ஒரே சுடுகாடு, இடுகாடு என்கிற நிலையை எட்ட வேண்டும், ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு அரசு, புகலிடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை ஜாதி, சமய மறுப்பாளர் என அறிவித்து அவர் களின் குழந்தைகளுக்குக் கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்கி வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டின் பிரகடனத்தை முன்மொழிந்து பேசிய ஆதவன் தீட்சண்யா, “ நம்மிடம் உள்ள பார்ப் பனீய கூறுகளை நீக்க வேண்டும். சுயமரியாதையுள்ள வாழ்க்கை என்று பெரியாரும், சுரண்டலற்ற பொன்னுலக வாழ்க்கை என்று மார்க்சும், அரசியல் விடுதலையுடன் சமூக பொருளாதார விடுதலை யையும் அடையும்போதே முழு விடுதலை அடைந்தவர்களாவோம் என்று அம்பேத்கரும் கூறினர்.
இதன் பொருள் சனாதனத்திடமிருந்து, வர்ணாசிரமத்திடமிருந்து, பார்ப்பனீயத்திடமிருந்து நம்மை முழுமையாக விடுவித்துக் கொள் வதுதான்.
அதற்கான போராட்டங்களை அனைத்து தளங்களிலும் வீச்சுடன் முன்னெடுக்க வேண்டுமாய் சமத் துவத்தில் அக்கறையுள்ள அனைவரையும் மாநாடு அழைக்கிறது” என்றார்.
மாநாட்டில், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தேவதாசி பெண்கள் விடுதலைச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாலம்மா, முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், இடதுசாரி செயற்பாட் டாளர் மருதையன், தமிழ்ப்பல் கலைக் கழக தத்துவத்துறை பேரா. கோ.ப.நல்லசிவம், ‘தமிழ்க்கேள்வி’ செந்தில்வேல், ‘அரண்செய்’ பா.ம. மகிழ்நன், ‘யு2 புரூட்டஸ்’ மைனர் வீரமணி, கவிஞர் நந்தலாலா, எழுத் தாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மணி யம்மை உள்ளிட்டோர் பேசினர். தமுஎகச மாநில பொருளாளர் சைதை ஜெ. நன்றி கூறினார்.
No comments:
Post a Comment