பாணன்
லண்டன்
1. பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பனர் தன்னை விட்டு விடுமாறு கூறி காவல்துறையினரின் கால் ஷூவை நக்க முயன்ற காணொலி.
லண்டன் நகரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது.
லண்டனின் நார்த் ஷீல்ட் (North Shields) என்ற பகுதியில் வசிக்கும் நபர் பிராஜு பிரசாத் (Praju Prasad). சமுக வலைதளத்தில் பழகிய சிறுமியை அவர் தன்னுடைய வயது 12 என்று கூறிய பிறகு அவரை சுற்றிப் பார்க்கலாம் என்று அழைத்து அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனை அடுத்து அவர் பெண்கள் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்ட கார்டியன் என்ற செயலிமூலம் தன்னைக் காப்பாற்றும்படி செய்தி அனுப்பியுள்ளார்.. இதனைக் கண்ட அப்பகுதி காவல்துறை அடுத்த சில நிமிடத்தில் அந்தப்பகுதிக்குச் சென்றது.
காவல்துறையினரைக் கண்டதும் சற்றும் எதிர்பாராது பிரஜு பிரசாத் ஓட முயன்றுள்ளார். ஆனால் காவல்துறை அவரைப் பிடித்துவிட்டது. இதனை அடுத்து அவர் காவல்துறையினரிடம் தனது குடும்பத்தினர் மிகவும் மதிப்பிற்குரியவர்கள், பலரது வீடுகளுக்குச் சென்று பூஜை புனஸ்காரங்கள் செய்து வருபவர்கள் என்றும், தான் இதுபோன்ற வழக்கில் சிக்கிக்கொண்டதைக் கண்டால் எங்கள் குடும்பத்தின் பெயர் கெட்டுவிடும். யாரும் மதிக்கமாட்டார்கள் என்றும், காவல்துறையினரின் காலில் விழுந்தும், காவலரின் ஷூவை நக்கவும் முயற்சித்தார். மேலும் லஞ்சம் கொடுக்கவும் முயன்றார். ஆனால் காவல்துறை அவரை எழுப்பிவிட்டு அவர் மீது பாலியல் தொடர்பான வழக்கை பதிவு செய்து உடனடியாக 9 மாதம் சிறைக்கு அனுப்பியது சிறையில் அவர் மீதான வழக்கு நடைபெற்று அவருக்குத் தண்டனை கிடைக்கும்.
இது அயர்லாந்து
2. கலாச்சாரக் கல்வியை கற்றுக் கொடுக்கிறேன் என்ற பெயரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இந்தியர்.
அயர்லாந்தின் அய்ரீஸ் நகரில் பன்பாட்டுக் கலை என்ற பெயரில் (ஸநாதனக் கல்வியை) கற்றுக்கொடுக்கச் சென்ற பார்ப்பனர் ஒருவர் அங்கு தன்னிடம் படிக்கவந்த சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். இதனை அடுத்து அந்தச்சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் புகார் கொடுக்க அவர்கள் அவனைத் தாக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர், பொதுவாக அயர்லாந்து மக்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதோ அல்லது சட்டத்தை கையிலெடுப்பதோ கிடையாது, ஆனால் இங்கிருந்து ஸநாதனத்தைக் காப்பாற்றுகிறோம், ஸநாதனத்தின் கலாச்சாரத்தைக் கற்பிக்கிறோம் என்று சென்ற நபரின் மோசமான நடவடிக்கை அவர்களின் கோபத்தை எல்லை மீற வைத்து விட்டது.
ஹாங்காங்
3. இளம் பெண் காமிராவில் பதிவு செய்கிறார் என்று தெரியாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இந்தியர்
ஹாங்காங் நகரில் வியாபாரம் தொடர்பாக அங்கு சென்று தங்கி இருக்கும் உத்தராகண்டைச் சேர்ந்த அமித் ஜயரியால் (Amit Jariyal) என்ற நபர் ஹாங்காகை சுற்றிப்பார்க்க வந்த கொரிய இளம்பெண்ணை தொடர்ந்து வந்தார். இதனை அடுத்து அந்த இளம்பெண் தன்னுடைய மொபைல் காமிராவை இயக்கி தனது நண்பர்களிடம் நான் ஆபத்தில் இருப்பது போல் உணர்கிறேன் என்று அவர்களுக்கு செய்தி அனுப்பிக்கொண்டே அங்குள்ள சுரங்க நடைபாதையில் சென்றார். அந்த இளம்பெண்ணின் காமிரா ஓடிக்கொண்டு இருப்பதை அறியாத அமிஷ் ஜயரியால் அப்பெண்ணை சுரங்கப்பாதையில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அந்தப்பெண் அழுது கொண்டே உதவிக்கு அழைத்து வேகமாக சென்றார். இருப்பினும் அமித் அவரை பின் தொடர்ந்து அவரது உடல் பாகங்களைத் தொட ஆரம்பித்தார். இதற்குள் அங்கு ஒரு நபர் வருவதைக் கண்ட அந்த இந்தியர் அங்கிருந்து விலகி ஓடிவிட்டார். இத்தனை நிகழ்வும் அப்பெண்ணின் கையில் இருந்த காமிராவில் அனைத்தும் பதிவாகிக்கொண்டே இருந்தது, இதனைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தர காவல்துறை உடனடியாக நிகழ்விடத்திற்குச் சென்றது. பெண்ணிடம் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி அவரது காமிராவில் பதிவான நபர் குறித்து விவரங்களைச் சேகரித்தனர். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஜெயரியால் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்று அவரது சமூக வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஹாங்காக் காவல்துறை அவரைக் கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் வெளிநாடுகளுக்குச் சென்று விடாமல் இருக்க விமான நிலையம் மற்றும் சீன எல்லைப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மற்றொன்று நெதர்லாந்து
ஜாதி தீண்டாமை குறித்து பேசி உதை வாங்கிய ஸநாதனி
4. இறைச்சி சாப்பிடுவர்களை மோசமானவர்கள் என்று கூறி நிறவெறி பேசிய ஹிந்துப் பெண்.
நெதர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இந்தியாவிலிருந்து சென்ற ஒரு பெண்ணும் படித்து வருகிறார். உணவு தொடர்பான விவகாரத்தில் நாங்கள் மரக்கறி உண்பவர்கள் என்பதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால், "எங்கள் ஊரில் மாட்டிறைச்சி சாப்பிடுவர்களை இழிவாக கருதுவார்கள். அவர்களோடு பழக மாட்டார்கள்" என்று ஆப்பிரிக்காவில் இருந்து படிக்க வந்த பெண்களிடம் ஜாதி வெறி தொடர்பானவற்றை பேசியுள்ளார்.
அவரது பேச்சு நிறவெறியாகவும் திரும்பியது - குறிப்பாக எங்கள் ஊரில் தீண்டத்தகாததாக மக்கள் உங்களைப் போல் கருப்பாக இருப்பார்கள் என்று கூற ஆப்பிரிக்க மாணவிகளுக்கு கோபம் வந்துவிட்டது, கருப்பாக இருந்தால் நாங்கள் மோசமானவர்களா? என்று கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் தன்னுடைய கருத்தை திரும்பப் பெறாமலும் தங்களது ஸநாதன தர்மத்தின் படி சென்ற பிறவியில் பாவம் செய்தவர்கள் இப்பிறவியில் கருப்பாகவும், தீண்டத்தகாதரவர்களாகவும் பிறக் கிறார்கள் என்று திமிராகப் பேசவே அப்பெண்ணை ஆப்பிரிக்க மாணவிகள் அடித்து துவைத்தனர்.
இந்த பெண் தாக்கப்பட்டது தொடர்பாக இந்தியாவில் பலர் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பினர். அதற்கு இந்திய தூதரகம் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை
பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்களும், ஜாதிவெறி, நிறவெறி பேசியவர்களும் பெரும் செல்வந்தர்களின் பிள்ளைகள். வணிகம் மற்றும் கல்வி தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்கள். இவர்களுக்கு டில்லி, மும்பை, சண்டிகர் போன்ற நகரங்களில் இருந்து ஹாங்காங்க், பிராங்போர்ட், லண்டன், அய்ரிஸ் போன்ற அய்ரோப்பிய கிழக்காசிய நகரங்களுக்குச் செல்வது என்பது புறநகரில் உள்ள ஒரு இடத்திற்குச்சென்று திரும்புவது போன்றதாகும். இவர்களுக்கு இந்தியர்கள் என்றால் குறிப்பாக உயர்ஜாதியினரான தங்களை உலகம் முழுவதுமே மதிக்கும். இந்தியாவைப் போல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் உயர்ஜாதியினரான தங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற ஒரு ஜாதியத்திமிர்த்தனத்தில் இவ்வாறு செய்கின்றனார்.
இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள ஹிந்து அமைப்புகள்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஹிந்து அமைப்புகள் அங்குள்ள ஹிந்து இளைஞர்களுக்கு "ஹிந்து மதத்தில் பார்ப்பனரான நாம் அனைத்து மனிதர்களையும் விட உயர்ந்தவர்கள். நாம் செய்வது மற்றவர்களுக்கு தவறாகப் பட்டாலும் நாம் சென்ற பிறவியில் செய்த நற்பலன் காரணமாக நமது தவறுகள் மன்னிக்கப்படும்" என்று மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர்.இந்த மூளைச்சலவையின் விளைவு இவர்கள் உலகின் எந்த மூலையில் சென்றாலும் பார்ப்பனியத்திமிர் காரணமாக சட்டத்தை மீறி குற்றம் செய்கின்றனர்.
No comments:
Post a Comment