தஞ்சாவூர், செப். 23- இந்தியாவின் வரலாறு கங்கை சமவெளியில் இருந்து இல்லாமல், காவிரிக் கரையில் இருந்து எழுதப்பட வேண்டும் என தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேனாள் முதல மைச்சர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கு தொடக்க விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் 21.9.2023 அன்று நடை பெற்றது.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, 'அண்மைக்கால ஆய்வு கள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு' என்ற தலைப்பில் தமிழக நிதி மற் றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:
தமிழ்நாட்டின் வரலாறு முதன்முதலில் நமக்கு அன்பில் செப்பேடுகள் மூலம்தான் தெரியவந்தது. அதன் மூலம்தான் சோழர்களின் கொடை, ஆட்சி முறைகள் போன்றவை வெளியு லகுக்கு தெரியவந்தன. இந்தியா வின் வரலாறு கங்கைச் சமவெளி யில் இருந்து எழுதுவது அல்ல, அது காவிரிக் கரையில் இருந்து எழுதக்கூடியதாக இருக்க வேண் டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை, வைப்பாறு போன்ற இடங்களில் மேற் கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கிச் செல்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழரின் நாகரிகம், சமுதாயம் போன்றவை எப்படி இருந்தன, அவை எப்படி மறைக்கப்பட்டன என்பதை எல்லாம் நாம் அறிந்து கொண் டால்தான், எதிர்காலத்தில் வரக் கூடிய சவால்களை எதிர் கொள்ள முடியும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து, கருத்த ரங்க அமர்வுகள் நடைபெற்றன. இதில், பல்வேறு தொல்லியல் அறிஞர்கள் உரை நிகழ்த்தினர்.
No comments:
Post a Comment