சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை தகாத வார்த்தைகள் கூறி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் தமிழ் வழக்குரைஞர்மீது நான்கு வெவ்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு அந்த வழக்குரைஞர் 5 ஆண்டுகள் வழக்காட சிங்கப் பூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை அடுத்து அவர் வகித்து வந்த அனைத்து அமைப்புகளின் பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
எம்.ரவி என்பவர் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஒரு ஹிந்துக் கோவிலில் நுழைந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்த பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் பெண்ணைத் தாக்கி காயப்படுத்தினார். தான் ஒரு வழக்குரைஞர் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும் அவர் அங்கிருந்து வெளியே சென்ற பிறகு பெண்மீதான தாக்குதல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்ட மற்றொரு பெண்ணையும் தாக்கி உள்ளார். இது தொடர்பாக அப்பெண்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். விசாரணைக்குப் பிறகு பொது இடங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது. பெண்களைத் தாக்கிக் காயமடையச் செய்தல் மற்றும் தனது பதவியைக் கூறி அச்சுறுத்தியது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டன. அவர் வழக் குரைஞர் என்பதால் நீதிமன்ற அனுமதிக்குப் பிறகு அவரை விசாரணைக்கு அழைத்து மருத்துவப் பரி சோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்மீது ஏற்கெனவே அநாகரீகமாக நடந்து கொண்ட இரண்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது பதவியைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி யுள்ளது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்), அனுமதி அளித்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினர். மருத்துவ அறிக்கை வந்த பிறகு அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு விசாரணை முடியும் வரை சிறைவைக்கப்படுவார்.
தற்போது அவரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழக்குரைஞர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவர் எந்த அமைப்புகளிலும் பொறுப்புகள் வகிக்கவும், சட்ட ஆலோசனை தொடர்பான நடவடிக்கையில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
இதுவே இந்தியாவில் நடந்திருந்தால் என்னவாகி இருக்கும்?
மணிப்பூரில் என்ன நடந்தது? நிர்வாணமாக இரண்டு பெண்கள் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட வில்லையா? அந்த இரண்டு பெண்களையும் காவல் துறையினரே கா(வி)லிகளிடம் ஒப்படைக்கவில்லையா?
குஜராத்தில் என்ன நடந்தது? கர்ப்பிணிப் பெண் ணான பில்கிஸ்பானு காவிகளால் சூறையாடப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகள் நல்லெண்ண அடிப்படை என்று கூறி முன் கூட்டியே விடுதலை செய்யப்படவில்லையா? அப்படி விடுதலை செய்யப்பட்ட அப்பட்டமான குற்ற வாளிகளை சங்பரிவார்க் கூட்டம் இனிப்பு வழங்கி, மேளதாளத்துடன் வரவேற்கவில்லையா?
ராஜஸ்தானில் குழந்தைத் திருமணத் தடுப்பு உள்பட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த பன்வாரிதேவி என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இரண்டு பார்ப்பனர்கள் மீதான வழக்கில், "பிரா மணர்கள் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய மாட் டார்கள்" என்று கூறி நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்தது உண்டே!
குட்டி நாடான சிங்கப்பூரில் நிலவும் சட்டம் - தீர்ப்பு இவைகளுக்கும் - 140 கோடி மக்கள் தொகை கொண்ட 'பாரத' 'புண்ணிய பூமி'க்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்து வெட்கப்பட வேண்டாமா?
No comments:
Post a Comment