இப்படியும் நேர்த்திக்கடனாம்! மேலூர் அருகே வைக்கோலை உடலில் சுற்றி முகமூடியுடன் சென்ற பக்தர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

இப்படியும் நேர்த்திக்கடனாம்! மேலூர் அருகே வைக்கோலை உடலில் சுற்றி முகமூடியுடன் சென்ற பக்தர்கள்!

மேலூர், செப்.27- மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கோவில்பட்டியில் ஏழைகாத்த அம்மன் என்கிற பெயரில் ஒரு கோவில் உள்ளது. 

வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 60 கிராமங்கள் வெள்ளலூர் நாடு என பல நூற்றாண்டுகளாக அழைக்கப்படுகிறது.

8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமங்களிலிருந்து கோவில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோவிலுக்கு விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக அம்மன் வேடமிட்ட 7 சிறுமிகள் மற்றும் பக்தர்கள் சென்றனராம்.

அதனை தொடர்ந்து மண்ணால் செய்யப்பட்ட பெரிய சேம குதிரை வாகனமும், மதுக்களையும்(மண் பொம்மைகள்) பக்தர்கள் சுமந்தபடி சென்றனராம். திருவிழாவில் பல்வேறு விதங்களில் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டார்களாம். அதில் ஒன்றுதான். ஆண் பக்தர்கள் உடலில் வைக்கோலை கயிறுபோல திரித்து சுற்றிக்கொண்டும், முகமூடிகளை அணிந்தும் சென்று நேர்த்திக்கடன் பெயரில் விநோதமாக சென்ற காட்சி. திருமணம் செய்ய வேண்டி பெண் பக்தர்கள் சிறிய மதுக்களை (மண் பொம்மைகளை) சுமந்து சென்றார்களாம். திருமணமான பெண் பக்தர்கள் மண்கலயங்களை எடுத்துச்சென்றனராம்!

No comments:

Post a Comment