பிள்ளையார் சிலை கரைப்பு ஆற்றில் மூழ்கி இதுவரை 4 பேர் பலி
சேலம் செப்.21 மேட்டூர்,தேவூர் பகுதிகளில் பிள்ளையார் சிலைகளை கரைக்க வந்த இடத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியானார்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 25). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பாரதி மற்றும் வெண்டனூர் பகுதியை சேர்ந்த 9 பேர் கிராமத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். நேற்று ஆற்றில் கரைக்கச் சென்றபோது நீச்சல் தெரியாத பாரதியை தண்ணீர் இழுத்துசென்றது. அவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாரதி உடலை மீட்டனர். பின்னர் உடற் கூராய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment