மண்ணாடிபட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

மண்ணாடிபட்டி கிராமத்தில் சிறப்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாக் கூட்டம்

ஊற்றங்கரை, செப்.27- கிருட்டினகிரி மாவட்டம், ஊற்றங்கரை வட்டம், மண்ணாடிபட்டி கிராமத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது பிறந்தநாள் விழா 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு எழுச்சியோடு நடைபெற்றது.

முன்னதாக ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து.இராஜேசன்  தலைமை தாங்கினார்.

ஊற்றாங்கரை இளைஞரணி செயலாளர் த.சிவகுமார்  இணைப்புரை வழங்கினார்.

விழாவிற்கு கழக மாவட்ட தலைவர் தா.அறிவரசன்,  மாவட்ட துணை தலைவர் வா.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி, ஒன்றிய தலைவர் செ.பொன்முடி, விடுதலை சிறுத்தை கட்சியின் கு.நரசிம்மன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி தங்கவேல்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்வின் தொடக்கமாக மண்ணாடிப்பட்டியில் அமைந் துள்ள புரட்சியாளர் அண்ணல். அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாவட்ட தலைவர் த.அறிவாசன் தலைமையில் மாலை அணிவித்து வீர முழக்கம் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை விடுதலை சிறுத்தைகளின் கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் வே. குபேந்திரன்  திறந்து வைத்தார்.

விழாவில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை களையும் செயல்பாடுகளையும் பல்வேறு தோழமைக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் மிக எளிமையாக கிராமப்புற மக்களுக்கு ஏற்ற வகையில் மிக சிறப்பாக  பேசினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக தோழர்.இரா.லெனின் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில தொழிலாளர் விடுதலை முன்னணி துணை செயலாளர் சா.அசோகன் ஆகியோர் மிக சிறப்பாக தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள்.

தோழர்களுக்கு சிறப்பு

விழாவில் மண்ணாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.அதில் வே.செல்வராஜ்,ஆ கண்ணப்பன், பூபதி பிருந்தா, விஜயராகவன் சண்முகம்,பூவன்,சங்கர், காவேரிப்பட்டினம் சீனிவாசன், இல. ஆறுமுகம், ஊற்றங்கரை ஒன்றிய இளை ஞரணி சுரேஷ் ஆகியோருக்கு ஆகியோருக்கு ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் செ.பொன்முடி சிறப்பு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. கிருஷ்ணன்  பெரியாரும் மாணவர்களும் என்ற தலைப்பில் மாணவர்கள் ஏன் பெரியாரை  தெரிந்து கொள்ள வேண்டும்  எப்படி தந்தை பெரியார் ஏற்படுத்திய சமூக நீதி பயன்படுத்தி படித்து முன்னேறுவது என்று மிக சிறப்பான தொரு உரை ஆற்றினார்.

பெரியாரை கிராமங்கள் தோறும் 

ஏன் கொண்டாட வேண்டும்?

விழா சிறப்புரையாக, தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், ஏன் பெரியாரை கிராமங்கள் தோறும் கொண்டாட வேண்டும்? ஏன் பெரியாரை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டாட வேண்டும்? தந்தை பெரியார் அவர்களால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன ,தந்தை பெரியார்  இல்லையென்றால் ஏழை எளிய மக்களின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று தந்தை பெரியார் அவர்களின் கோட் பாடுகளையும், தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் உழைப்பையும் மிக சிறப்பாக எடுத்துக் கூறி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து பேசிய மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா. சரவணன்  தந்தை பெரியார் அவர்களுக்கு  அவருடைய பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட ஜாதி கொடுமையின் காரணமாக அவர் அப்போதே இதை கடுமையாக எதிர்த்து கேள்வி கேட்டார் என்ற வரலாற்று உண்மையை பாமர மக்களும் ஏற்றுக் கொள்ளும்படியும் ரசிக்கும்படி கிராமத்துப் பாணியில் மிக எளிய முறையில் எடுத்துக் கூறி ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார்  எப்படி தன்னை பகுத்தறிவாளராக மாற்றிக்கொண்டார் அதற்காக அவர் சந்தித்த இன்னல்கள் என்ன அதை அவர் எப்படி வெற்றி கொண்டார் என்று தொடங்கி வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்  எப்படி கலந்து கொண்டு போராடி ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கி தந்தார் என்ற நிகழ்வை ஒரு திரைப்படக் காட்சியை போல மிக தத்ரூபமாக எடுத்துக் கூறினார். இதுவரை பெரியார் அவர்களை கேள்விப் படாதவர்கள் கூட இப்படிப்பட்ட ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று சிந்திக்க வைக்கும்படி அவருடைய உரை அமைந்தது.அதனைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

இறுதியாக இளைஞரணி சார்பாக ச.சதீஷ்  நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment