புதுடில்லி, செப். 4- நாடாளு மன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. மழைக்கால கூட்டத் தொடர் சமீபத்தில்தான் முடிந் திருக்கும் நிலையில், மீண்டும் சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தன் மூலம், இந்த 5 நாள் தொடரில் முக்கிய மசோதாக் கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டத் தொடரை முன்னிட்டு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்களின் ஆலோசனை கூட் டத்துக்கு காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்த கூட்டம் (செவ்வாய்க் கிழமை) டில்லியில் உள்ள கார்கேயின் இல்லத்தில் நடக் கிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் கடைப் பிடிக்க வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை ஒன்றிய அரசு இதுவரை வெளியிடாத நிலை யில், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் மசோதாக்களுக்கு ஆற்ற வேண்டிய எதிர்வினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்போல இந்த கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களுடன் கார்கே விவாதிப்பார் என கூறப்படுகிறது.
பாரதிய ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியாக எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள நிலையில், கடந்த சில மாதங்க ளாக பல பிரச்சினைகளில் பாரதியஜனதாவுக்கு எதிராக இந்த கட்சிகள் இணைந்தே குரல் கொடுத்து வருகின்றன.
சமீபத்தில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத்தொடரி லும் மணிப்பூர் விவகாரம் உள் ளிட்ட பல்வேறு பிரச்சினை களை இணைந்தே இந்த கட்சி கள் இரு அவைகளிலும் எழுப்பி இருந்தன.
இதன் தொடர்ச்சியாக வருகிற சிறப்பு கூட்டத் தொடரிலும் அனைத்து விவகா ரங்களிலும் இணைந்தே குரல் கொடுக்க திட்டமிட்டு வரும் நிலையில், இந்த கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment