டில்லி அரசுப்பள்ளி ஆசிரியையின் மதவாதப் பேச்சு
புதுடில்லி, செப். 1- தலைநகர் டில்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் இசுலா மிய மாணவனை வகுப் பறையில் நிற்கவைத்து உங்கள் குடும்பத்தார் ஏன்? பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. அப்படி அவர்கள் சென்றிருந்தால் உனது இடத்தில் ஒரு ஹிந்துவிற்கு இடம் கிடைத்திருக்குமே இப்போது ஒரு ஹிந்து படிக்க முடியாமல் போய் விட்டதே என்று வகுப் பாசிரியர் கூறியுள்ளது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது சம் பந்தப்பட்ட ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று மாண வர்களின் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.
முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் முசா பர் நகரில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர், இசுலா மிய மாணவர் ஒருவரை, சக மாணவர்களை வைத்து அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத் தியது. அதுமட்டுமின்றி சிறுவனுடைய மதத்தைக் குறிப்பிட்டு தரக்குறை வாகவும் பேசியுள்ளார். இதுதொடர்பான காட் சிப்பதிவு வைரலானது. சம்பந்தப்பட்ட ஆசிரி யைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அந்த ஆசிரியை தான் செய்த இந்த கொடூரச் செயலை தவறென்றே ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவர் மீது இது வரை எந்த ஒரு நடவ டிக்கையும் உத்தரப்பிர தேச அரசு எடுக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், டில்லி காந்தி நகரில் உள்ள அர சுப் பள்ளியில் ஆசிரியை ஒருவர், இசுலாமிய மாணவர்களிடம், நாடு பிரிக்கப்பட்டபோது உங்கள் குடும்பங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போக வில்லை? என கேள்வி எழுப்பியிருக்கிறார். மத ரீதியாகவும் கருத்துக் களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 4 மாணவர் கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
இதுபோன்ற கருத்துகள் பள்ளியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என் றும் மாணவர்களின் குடும்பத்தினர் வலியுறுத் துகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி யின் சட்டமன்ற உறுப்பி னர் அனில் குமார் பாஜ்பாய் தெரிவித்தார்.
No comments:
Post a Comment