சென்னை,செப்.1- மறுசீரமைக்கும் 3 மசோதாக்களுக்கு ஹிந்தியில் பெயரி டப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் நேற்று (ஆக.31) சென்னையில் ஆர்ப் பாட்டத் தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டம், (Indian penal code) குற்றவியல் நடைமுறை சட்டம் (code of Criminal Procedure) மற்றும் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) ஆகிய மூன்று சட் டங் களையும் மறுசீரமைக்கும் மூன்று மசோ தாக்களை ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆக. 12 அன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது. பழைய சட்டங்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மசோக்களுக்கு முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, மற்றும் பாரதிய சாக் ஷ்யா என்று இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.
மேற்படி மூன்று மசோதாக்களும் நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வால் அறிமுகம் செய்யப்பட்டு நிலைக் குழுவின் ஆய் வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காலனி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம் என்பதால் அவற்றை சீர்திருத்தம் செய்யும் நோக் கில் புதிய மசோதா தாக்கல் செய்வதாக ஒன்றிய அரசு கூறியிருக்கிறது.
இந்தியாவில் பல மொழிகள் பேசும் மக்களும், பல தேசிய இனங்களை சேர்ந்தவர்களும் வாழ்ந்து வரும் நிலையில் ஒன்றிய அரசு மூன்று மசோதாக்களை ஹிந்தியில் பெயரிட் டுள்ளது ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். இது அரசமைப்பு சட்டத்தின் சரத்து 348 க்கு முரணான நட வடிக்கை என்று தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதி மன்றம் முன்பு சமத்துவ வழக்குரைஞர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கம் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்துக்கொண்டனர்.
சமத்துவ வழக்குரைஞர்கள் சங்கத் தின் மாநில பொதுச்செயலாளர் பார் வேந்தன், ஜனநாயக வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் பாரதி, அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.சிவக்குமார், மாவட்ட செயலாளர் பா.சீனிவாசன், திராவிடர் கழக பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் ரஜினிகாந்த், மூத்த வழக்குரைஞர் சங்கர சுப்பு உள்ளிட்ட பலர் பேசினர்.
No comments:
Post a Comment