பெங்களூரு, செப் 22- கருநாடக மாநிலம் .கோலாரில் அவதூ றாக கூறியதாக ஜாதி சொல்லி திட்டி விளக்குமாற்றால் தாக் கியதால் மனம் உடைந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட இளைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதனால் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுதாவது:-
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குருலகெரே கிராமத்தை சேர்ந்தவர் சீனி வாஸ் (வயது 30). தொழிலாளி. இவரது நண்பர் அசோக். இந்த நிலையில் நேற்று முன்தினம் (20.9.2023) சீனிவாஸ், அசோக், அவரது நண்பர்கள் ரமேஷ், தர்மேந்திரா, மஞ்சு ஆகியோர் கூலிவேலை செய்துவந்தனர்
அப்போது தாழ்த்தப்பட வகுப்பைச்சேர்ந்த சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பம் குறித்து உயர்ஜாதியைச்சேர்ந்த அசோக் தவறாக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சினிவாஸனை அசோக்கும், அவரது நண்பர்களும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர் அசோக்கின் மனைவியும் சீனி வாசனை விளக்குமாற்றால் சீனிவாசை தாக்கியதுடன், அவரை ஜாதி சொல்லி திட்டி யுள்ளனர். இதனால் சீனிவாஸ் மனம் உடைந்தார்.
இந்த நிலையில் ஜாதி சொல்லி திட்டியதுடன் விளக் குமாற்றால் தன்னை தாக்கிய தால் அவமானம் அடைந்த சீனிவாஸ் வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் மாலூர் காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தற்கொலை செய்த சீனிவாஸ் உடலை கைப்பற்றி உடற்கூராய் வுக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்து விசா ரணை நடத்தினர். விசாரணை யில், அசோக் அவரது நண்பர் கள் மற்றும் அவரது மனைவி யும் சேர்ந்து சீனிவாசை தாக் கியதுடன், விளக்குமாற்றால் தாக்கியதால் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
எனவே இதற்கு காரணமா னவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக்கு எதிரான அமைப்பினர் கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment