அய்தராபாத்,செப்.28- தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட உடனே தெலங்கானா மாநிலத்தில் இருந்து அதிகாரிகள் தமிழ்நாடு வருகை புரிந்து சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 24ஆம் தேதி முதல் தெலங்கானா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த அம்மாநில அரசு முடிவு
செய்துள்ளது.
No comments:
Post a Comment