போபால் செப்.1 மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக் கிறது. இன்னும் மூன்று மாதங் களுக்கு குறைவாக இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடு பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க சிவராஜ் சிங் சவுகான் வியூகம் வகுத்து வருகிறார். பாரதிய ஜன தாவும் பிரசாரத்தை தொடங்கி விட்டன. இந்த நிலையில், அதிருப்தியில் இருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மத்தியப் பிரதேசம் ஷிவ்புர் மாவட்டத்தில் உள்ள கோலாரஸ் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற உறுப் பினர், வீரேந்திர ரகுவான்ஷி தான் பாரதியஜனதாவில் இருந்து விலகி யுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, தான் கடந்த மூன்று- அய்ந் தாண்டுகளாக சந் தித்து வந்த வேதனை குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தெரிவித்தி ருந்தேன். அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குவாலியர்- சம்பல் பகுதி யில் என்னைப் போன்ற கட்சியினர், புதிதாக பாரதிய ஜனதா கட்சிக்கு வந்தவர் களால் ஓரம் கட்டப்படு கிறோம்.
நாங்கள் 2014 மற்றும் 2019 மக் களவை தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிக்காக உழைத்தவர்கள். கோலாரஸ் பகுதிகளில் ஊழல் அதி காரிகள் நியமிக்கப்பட்டு, என்னால் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களுக்கு முட் டுக்கட்டை போடப்படுகிறது. என்னையும், என்னுடன் பணியாற்றுபவர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment