காலை உணவுத் திட்டம் : நாடாளுமன்றக்குழு வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 1, 2023

காலை உணவுத் திட்டம் : நாடாளுமன்றக்குழு வரவேற்பு


மதுரை, செப்.1
- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப் படுத்தியுள்ள காலை உணவுத்திட்டத்தை ஊரக வளர்ச்சி  மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் குழு  30.8.2023 அன்று வரவேற்றுள்ளது.

தூத்துக்குடி மக்களவை உறுப் பினர் கனிமொழி கருணாநிதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் மதுரையில் முதல மைச்சரின் காலை உணவுத் திட்ட செயலாக்கத்தைப் பார்வையிட்டனர். 

மதுரை நெல்பேட்டை, சாத்த மங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளி யின் சமையலறையை கனிமொழி கருணாநிதி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப் பினர்கள் ஆய்வு செய்தது. 

அவர்களிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார், மேயர் இந்திராணி ஆகியோர் காலை உண வுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் திங்கள் முதல் வெள்ளி  வரை தினம்தோறும் குழந்தைகளுக்கு வழங் கப்படும் உணவுகள்,  பயனடையும் குழந் தைகளின் எண்ணிக்கை குறித்தும் விளக் கினர்.  தொடர்ந்து நாடாளுமன்றக் குழு சில மாணவர்களுடன் கலந்துரை யாடிய தோடு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட் டனர். காலை 8.15 மணி முதல் 8.30 மணி வரை காலை உணவு வழங் கப்பட்டதைத் தொடர்ந்து காலை வணக் கத்தில் கலந்து கொண்டதாக மாணவர் கள் நாடாளுமன்றக்குழுவிடம் தெரிவித்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி மற்றும் சியாம் சிங், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி யுள்ளது. 

பெரும்பான்மையான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்  தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர் களுக்கு காலை உணவுத் திட்டம் ஒரு சிறப்பான திட்டமாக வந்துள் ளது. குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுகிறது.

எந்தவொரு குழந்தையையும் வெறும் வயிற்றில் படிக்க வைக்கக் கூடாது என்பதே இந்தத் திட்டத் தின் நோக்க மாகும். அப்படிச் செய்தால் பள்ளிச் சூழல் அவர்களுக்கு விரோதமாக மாறலாம். பின்தங்கிய குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்கள் வளரும் பருவத்திலேயே நல்ல சூழலில் வளர வேண்டும் என தமிழ்நாடு அரசு விரும்புகிறது என்றனர்.


No comments:

Post a Comment