அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 13, 2023

அர்ச்சகர் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ் அமைச்சர் பி.கே. சேகர்பாபு வழங்கினார்

சென்னை, செப்.13 அர்ச்சகர், ஒதுவார், பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார்.

 நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 2022-_2023-ஆம் ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண் ணாமலை, சிறீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 6 அர்ச் சகர் பயிற்சி பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 94 மாணவர் களுக்கும், மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 4 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 98 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் சேகர்பாபு வழங்கினார். 

பின்னர் அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெலுங்கானாவிற்கும், புதுச் சேரிக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநரே தவிர தமிழ்நாடு பாரதீய ஜனதா கட் சிக்கு கொள்கைப் பரப்பு செய லாளர் அல்ல. ஆயிரம் கோவில் களில் குட முழுக்கு குறித்து கேட்க தார்மீக உரிமை அவருக்கு இல்லை. அவர் ஆளுநராக இருக் கும் மாநிலங்களில் இதுபோன்ற குட முழுக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அவருக்கு தகுதி உள்ளது. போகிற போக்கில் ஏதாவது சிண்டு முடிந்துவிட்டு போகிற வேலையை புதுச்சேரியிலும், தெலுங்கானா விலும் வைத்துக்கொள்ளட்டும்.

ஒரு பக்கம் ஸனாதனம், மறுபக்கம் சமத்துவம்

'என் மண் என் மக்கள்' என்ற பிரசாரப் பயணம் எடுபடவில்லை என்பதற்காக ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும் என செயல்படு கிறார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் சமத்துவத்திற் குண்டான ஆட்சி. தி.மு.க.வின் கொள்கையே சமத்துவம்தான். ஆகவே ஸனாதனம் என்பது ஒரு பக்கம் என்றால், சமத்துவம் என்பது மறுபக்கம். அனைத்து அமைச்சர்களுக்கும் சமத்துவத் தைப் பற்றி பேசுகிற உரிமை உண்டு.

தமிழ்நாட்டை பொறுத் தளவில் ஆன்மிகத்தில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை பாது காக்கின்ற பணிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதுதான் எங்கள் செயல் திட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுரு பரன், ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், ந.திருமகள், சி.ஹரிப்ரியா சென்னை மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment