புதுடில்லி,செப்.16 செய்தித் தொலைக்காட்சிகள் - ஊடகங் களில் நடைபெறும் விவாதங் களுக்கு ‘இந்தியா’ கூட்டணியின் பிரதிநிதிகளை அனுப்பிவைப்பது தொடர்பாக, ஊடகக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ள தாகவும், எந்த நிகழ்ச்சி தொகுப் பாளர் நடத்தும் விவாதங்களில் பங்கேற்பது; அல்லது பங்கேற்ப தில்லை என்பதை ஊடகத் துணைக்குழுவே முடிவு செய்யும் என்றும் ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட செய்தித் தொலைக்காட்சி நெறியாளர்கள், ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக எரிச்சலூட்டும் வகையில் செயல் படுவதாக குறிப்பிட்டு ஊடகக் குழுவிடமிருந்து வந்த பரிந்துரையின்படியே இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளதாகவும் 'இந்தியா' கூட்டணி கூறியுள்ளது.
இதன்படி ‘நியூஸ் 18’-இன் அமன் சோப்ரா, அமிஷ் தேவ்கன் மற்றும் ஆனந்த் நரசிம்மன், ‘பாரத் எக்ஸ்பிரஸி’ன் அதிதி தியாகி, ‘டிடி நியூஸி’ன் அசோக் சிறீவஸ்தவ், சுதிர் சவுத்ரி மற்றும் ‘ஆஜ்தக்’கின் சித்ரா திரிபாதி ஆகிய இந்த தொகுப்பாளர்களின் நிகழ்ச்சி களில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.
அதேபோல, ‘பாரத்24’-இன் ரூபிகா லியாகத், ‘இந்தியா டுடே’யின் கவுரவ் சாவந்த் மற்றும் ஷிவ் அரூர், ‘இந்தியா டிவி’யின் பிராச்சி பராஷர், ‘டைம்ஸ் நவ்’ நவ்பாரத்தின் நவிகா குமார் மற்றும் சுஷாந்த் சின்ஹா மற்றும் ‘ரிபப்ளிக் பாரத்’தின் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர் நடத்தும் விவாதங்களிலும் பங்கேற்ப தில்லை என முடிவு செய்யப்பட் டுள்ளது.
இந்த குறிப்பிட்ட சேனல்களின் நடவடிக்கைகள், அடுத்த சில மாதங் களுக்கு கவனிக்கப்படும்.
இதில், முன்னேற்றம் இருந்தால் புறக்கணிப்பு விலக்கிக் கொள்ளப் படும். மாறாக, எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், இந்த சேனல் களுக்கான விளம்பரங்களை தடை செய்வது போன்ற நடவடிக்கை களையும் ‘இந்தியா’ மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment