இதுதான் குஜராத் பிஜேபி ஆட்சியின் சாதனை! சிதறி கிடந்தது ரூபாய் 800 கோடி போதைப் பொருள்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

இதுதான் குஜராத் பிஜேபி ஆட்சியின் சாதனை! சிதறி கிடந்தது ரூபாய் 800 கோடி போதைப் பொருள்கள்

ராஜ்கோட், செப்.30  குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு அருகே உள்ளது மிதி ரோகர் என்ற கடற்கரை கிராமம். இங்கு போதைப் பொருள் கடத்தல் நடைபெறு வதாக கட்ச் கிழக்கு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு காவ லர்கள் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை பகுதி யில் சில பாக்கெட்டுகள் சிதறிக்கிடந்தன. அவற்றை காவலர்கள் சேகரித்து தடய வியல் பரிசோதனைக்கு அனுப் பினர். தலா ஒரு கிலோ எடை யில் 80 பாக்கெட்டுகளில் இருந்தது கோகைன் போதைப் பொருள் என்பது பரிசோ தனையில் தெரியவந்தது. இவற்றின் பன்னாட்டுச் சந்தை மதிப்பு ரூ.800 கோடி. 

இது குறித்து கட்ச் கிழக்கு காவல் துறை கண்காணிப் பாளர் சாகர் பக்மர் கூறுகை யில், ‘‘பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல் உள்ளூர் நபர்களிடம் போதைப் பொருட்களை நேர டியாக கொடுப்பதில்லை. போதைப் பொருள் பார்சல் களை தனியாக ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட்டு, அதன்பின் அவற்றை எடுத்துச் செல்லும் நபருக்கு தகவல் தெரிவிக் கின்றனர். அதனால் கடற்கரை மற்றும் கடலோர கிராமங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள் ளோம். இந்த போதைப் பொருள் யாருக்கு அனுப்பப் பட்டது என்பதை கண்டறியும் பணி யில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றார். 

பாகிஸ்தானுக்கு அருகே கட்ச்பகுதி உள்ளதால், போதைப் பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் இங்கு போதைப் பொருட்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment