அரசு வழக்குரைஞர் சிவ ஞானம், வழக்குரைஞர்கள் முத்து சாமி, விஸ்வநாதன், முருகன், பால்பாண்டி, அன்பு நாகராஜன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 165 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. தொடர்ந்து 79 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து பேசிய நீதிபதி செந்தில்குமார் கூறும்போது, மக் கள் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாத நிலை இருப்பதால் வழக்குகளுக்கு வரும்போது இருதரப்பினரும் வந்தால் வழக்கை விரைவாக முடிக்க முடியும்.
மேலும் மக்கள் நீதிமன்றத்தை பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத் திக்கொள்ள தயங்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற விவாதத் தில் வாகன வழக்கு, காசோலை வழக்கு, குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு, லாட்டரிச் சீட்டு விற்ற வழக்கு, மதுபான வழக்கு, குடும்ப வழக்கு என மொத்தம் 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.19 லட்சத்து 75 ஆயிரத்து 950-க்கு சமரசம் செய்யப்பட்டது.
குறிப்பாக 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தோட்ட நிறுவன வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முடிவில் வழக்குரைஞர் பெருமாள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment