இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை உலக வங்கி அறிக்கையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 5, 2023

இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை உலக வங்கி அறிக்கையில் தகவல்

நியூயார்க், செப்.5 உலகின்  5 - ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதே வேளையில், நாட்டில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வில்லை என உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2021-ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இத்தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆரோக் கியமான உணவுக்கான விலையும் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கியமாக, மும்பையில் கடந்த 5 ஆண்டு களில் உணவுப் பொருள்களின் விலை 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், ஊதியம் 28 முதல் 37 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment