கூடலூரில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 3, 2023

கூடலூரில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது

இன்று (03.09.2023)   நீலமலை மாவட்டம், கூடலூர், கள்ளிக்கோட்டை சாலை, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக மாவட்ட பிரதிநிதி ஆசாத்   வாழ்த்துரை வழங்கினார். திமுக தலைமைக் கழக சொற்பொழிவாளர் மு.பாண்டியராஜன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.வாசுதேவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ஜீவா ஆகியோர் முன்னிலையேற்றனர். தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா.கவுதமன் பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார். பேராசிரியர் ப.காளிமுத்து "தந்தை பெரியார் ஓர் அறிமுகம்" என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.   


No comments:

Post a Comment