6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 9, 2023

6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்!

உ.பி., மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வுக்குப் பின்னடைவு!

புதுடில்லி, செப்.9  ஆறு மாநிலங்களில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக மூன்று இடங்களைக் கைப்பற்றி யுள்ளது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்ரி, திரிபுரா மாநிலத்தின் போக்ஸாநகர் மற்றும் தான்பூர் தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் கோஷி, உத்தரா கண்ட் மாநிலத்தில் பாகேஸ்வர், கேரளாவில் புதுப்பள்ளி மற்றும் மேற்குவங்கத்தில் துக்புரி ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 5.9.21023 அன்று இடைத்தேர்தல் நடந்தது. அதன் வாக்குகள் நேற்று (8.9.2023) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாயின. 

திரிபுராவின் தன்பூர், போக்ஸாநகர் தொகுதி களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர்கள் தஃபஜ்ஜால் ஹொசைன் மற்றும் பிந்து தேப்நாத் ஆகியோர் முறையே 30,237 மற்றும் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் அம்மாநில மேனாள் முதலமைச்சருமான ஒமன் சாண்டி 50 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருந்த புதுப்பள்ளி தொகுதியை, இந்த இடைத்தேர்தலில் அவரது மகனும் காங்கிரஸ் வேட்பாளருமான சாண்டி ஒமன் தக்க வைத்துக்கொண்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஎம் வேட் பாளரை விட 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது தந்தையின் சாதனையை முறியடித்தார். 

உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதி யில் பாஜக வேட்பாளர் பார்வதி தாஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பாசன்ட் குமாரை 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஜார்க்கண்ட் மாநிலம் தும்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் என்டிஏ ஏஜேஎஸ்யு கட்சியின் யசோதா தேவியை இண்டியா கூட்டணி வேட் பாளரான பீபிதேவி 17,000 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்கடித்தார். 

மேற்கு வங்கத்தின் துர்காபுரியை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவிடமிருந்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் கோஷி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சமாஜ்வாடி கட்சியின் தாரா சிங் சவுஹான் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சுதாகர் சிங், தாரா சிங் சவு ஹானை 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி யுள்ளார் இதன் இதன்மூலம் கோசி தொகுதியை சமாஜ்வாதி கட்சி தக்கவைத்துள்ளது.

No comments:

Post a Comment