புதுடில்லி, செப்.29- தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கின்றனர். அப்போது 5 மாநிலங்களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.
அனைத்து ஆலோசனைகளையும் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு முன்பு முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
இதனால் அக்டோபர் 7 ஆம் தேதி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அக்டோபர் 7ஆம் தேதி வெளி யிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment