சிவகங்கை, செப். 25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தந்தை பெரி யார் மற்றும் பெண்களை இழிவாக விமர்சித்து பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா மீது சிவகங்கை காவல் துறையினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலில் கடந்த செப். 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பங்கேற் றார். இந்த விழாவில் பேசிய எச்.ராஜா அனைவரும் திடுக்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவுபடுத்திப் பேசினார்.
அதேபோல தந்தை பெரியார் மற்றும் பெண்களையும் அவதூ றாகப் பேசினார். இரு மதங்களுக்கு இடையே மோதலை உருவாக்கும் கருத்துகளை முன்வைத்தார் என காளையார்கோவில் காவல்நிலை யத்தில் திமுக நிர்வாகிகள் புகார் கொடுத்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத் தினர்.
எச்.ராஜா பேசிய பேச்சுகளை ஆய்வு செய்த காவலர்கள் கடந்த 21ஆம் தேதி காளையர்கோவில் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்தனர். மத மோதல்களை உருவாக்கும் வகை யில் பேசியது உள்ளிட்ட காரணங் களுக்காக எச்.ராஜா மீது மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் காளையார் கோவில் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை காவல்நிலையத்தில் சிவகங்கை நகர திமுக செயலாளர் துரை ஆனந்த் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிவகங்கை நகர காவல்துறை எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய் தனர்.
எச்.ராஜா மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் சிவகங்கை நகர காவலர்கள் வழக்கு பதிந்துள்ளனர்.
எச்.ராஜா மீது இதேபோல பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப் பட்ட போதும் அவர் கைது செய் யப்படவில்லை. தந்தை பெரியார் சிலை உடைப்பு, அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை இழிவுபடுத்தி பேசியது, கனிமொழி எம்.பி குறித்து அவதூறாக பேசி யது என எச்.ராஜா மீது மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுத் தாக்கல் செய்தி ருந்தார். எச்.ராஜவின் இந்த கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ், எச்.ராஜா இதே போல் பேசுவது முதல் முறையல்ல. அவருடைய பேச்சு தனிநபர்களை மட்டுமல்ல, அனைவரையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பதால் எச்.ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய முடியாது; அவர் மீதான வழக்குகளை 3 மாதங்களுக் குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவதூ றாகவும் இழிவாகவும் பேசி வழக்குகளுக்குள்ளாகியிருக்கிறார் எச்.ராஜா.
No comments:
Post a Comment