சென்னை, செப். 19 - தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கருநாடக அரசு உடனடியாக திறந்து விடுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய ஜல்சக்தி துறை ஒன்றிய கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ் நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து இன்று (19.9.2023) கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கிடையே, வினாடிக்கு 12,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு கோரிக்கை வைத்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கருநாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment