புதுடில்லி, செப்.12 மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம், தெலங் கானா, ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்ட மன்றங்களின் பதவிக் காலம் வருகிற மாதங்களில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர் தல் நடத்துவதற்கான முன்னேற் பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.
பொதுவாக தேர்தலுக்காக தயாராகி வரும் மாநிலங்களில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி இந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையர்கள் ஏற்கெனவே நேரில் சென்று முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இதில் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் ஏற்கெனவே ஆய்வுகளை முடித்து விட்டனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் இந்த பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது மாநில வாக் காளர் பட்டியலையும் அவர்கள் வெளியிட்டனர்.
இதைத் தொடர்ந்து, ராஜஸ் தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத் தொடக்கத்தில் ஆய்வு மேற்கொள்ள இருக்கின் றனர். அதைத்தொடர்ந்து 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியிடப் படும். குறிப் பாக, அடுத்த மாதம் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அக் டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல் நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி உள்ள மத்தியப் பிரதேசத் தில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்கள் காங்கிரசிடம் உள்ள நிலையில், தெலங்கானாவை பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி செய்கிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மிசோ தேசிய முன்னணி அதிகாரத்தில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற இருக்கும் இந்த 5 மாநில தேர்தல், மக்களவை தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment