பார்ப்பனரல்லாதார் முன்னிலை பெற வேண்டும்
தமிழ்நாடு என்றே குறிப்பிடுவார் வ.உ.சி.
அரசியல் மேடைகளில் மட்டுமல்ல இலக்கிய உரைகளி லும் தனது சிந்தனை களை முழுமையாக பதிவு செய்துள் ளார் வ.உ.சி.
அனைத்துக் கட்சிப் பார்ப்பனரல்லாதாருக்கும்...!
1936 மே 3 ஆம் நாள் அன்று திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடக்கிறது. அது தொடர் பாக அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார் வ.உ.சி.
நமது சென்னை மாகாணத்தில் - அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் என்று அந்தக் கடிதத்தைத் தொடங்குகிறார். அதா வது 1936 ஆம் ஆண்டே 'தமிழ்நாடு' என்று சொல்லத் தொடங்கிவிட்டார் அவர். பார்ப் பனரின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு பார்ப்பன ரல்லாதார் பின்னிலைக்குச் சென்று கொண் டிருக்கிறார்கள் என்றும், பார்ப்பனருடைய ஆதிக்கத்தை உதறித் தள்ளிவிட்டுப் பார்ப்பனரல்லாதார்கள் முன்னிலைக்குச் செல்லத் தொடங்கும் நன் னாளின் வரவை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்றும், அதற்கு அனைத்துக் கட்சியிலும் இருக்கும் பார்ப் பனரல்லாதார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் வேண்டு கோள் விடுக்கிறார் வ.உ.சி. இதைச் செய்தால் உங்களைத் தேசத்துரோகிகள் என்பார் கள் என்கிறார் வ.உ.சி. - அதைப் பற்றிக் கவலைப்படா தீர்கள். பார்ப்பனரல்லாச் சகோதரர்களே! ஜாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலிய வற்றை யெல்லாம் விடுத்து நீங்களெல்லாம் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூ கத்தை முன்னிலைக்கும் நன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக.
உங்கள் அன்புள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை" என்பதுதான் வ.உ.சி. விடுத்த வெளிப்படையான குரல். இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் குரல். (குடிஅரசு 17.5.1936)
No comments:
Post a Comment