சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் சார்பில் செப்டம்பர் 5 மாலை 5 மணிக்கு பேரணி ஆறு மணிக்கு மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அது சம்பந்தமாக செய்தியாளர் சந்திப்பு கூட்டம் 3.9.2023 அன்று காலை 10 மணி அளவில் சிதம்பரத்தில் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன், சிதம்பரம் மக்கள் நலக்குழு தலைவர் வி.எம்.எஸ். சந்திர பாண்டியன் ஆகியோர் 5.9.2023 அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி பற்றிய நோக்கத்தை முக்கியத்துவத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் நிறுவன தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் ராஜு, மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பங் கேற்கும் சூழல் குறித்தும் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினர்.
பொதுவுடமைக் கட்சி மாநில துணைத்தலைவர் மோகன், திராவிடர் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ் திலீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment