பக்தியால் விளைந்த கேடு மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 28, 2023

பக்தியால் விளைந்த கேடு மத்தியப் பிரதேசத்தில் விநாயகர் சிலை கரைப்பு: குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

போபால், செப்.28- நாடு முழுவதும் கடந்த 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.

பின்னர் கிராமத்தினர் விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைக்க கொண்டு சென்றனர். குளத்தில் சிலைகளைக் கரைக்கும் போது 7 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் 3 சிறுவர்களை மீட்டனர். எனினும் 3 சிறுமிகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் குளத்தில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment